வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் - மிஸ்டு கால் மெசேஜ், AI அப்டேட்கள், ஸ்டேட்டஸ் ஸ்டிக்கர்கள்
வாட்ஸ்அப், பண்டிகை காலத்தை முன்னிட்டு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மிஸ்டு கால் மெசேஜ்:
ஒரு கால் எடுக்கப்படாமல் போனால், பயனர்கள் உடனடியாக வாய்ஸ் நோட் அல்லது வீடியோ நோட் அனுப்ப முடியும். இது வொய்ஸ் மெயிலுக்கு மாற்றாக செயல்படும்.
கால் அப்டேட்கள்:
வாய்ஸ் சாட்-இல், “Cheers” போன்ற ரியல்-டைம் ரியாக்ஷன்கள் அனுப்ப முடியும்.
குரூப் வீடியோ காலில், பேசும் நபரை தானாகவே ஸ்பாட்லைட் செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

Meta AI அப்டேட்கள்:
Midjourney மற்றும் Flux போன்ற புதிய AI மாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பயனர்கள், வாட்ஸ்அப்பில் நேரடியாக உயர்தர தனிப்பயன் படங்களை உருவாக்க முடியும்.
AI-powered photo animation மூலம், எந்த static image-ஐயும் சிறிய வீடியோவாக மாற்றி பகிர முடியும்.
டெஸ்க்டாப் வசதிகள்:
புதிய Media Tab மூலம், அனைத்து media, documents மற்றும் link-களை ஒரே இடத்தில் எளிதாக தேடவும் மேலாண்மை செய்யவும் முடியும்.
Link previews சுருக்கமாகக் காட்டப்படும்.
ஸ்டேட்டஸ் & சேனல் அப்டேட்கள்:
Interactive ஸ்டிக்கர்கள், பாடல் வரி templates, question prompts ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
பயனர்கள் ஸ்டேட்டஸில் கேள்விகளை போஸ்ட் செய்து, பார்வையாளர்களிடமிருந்து நேரடி பதில்களை பெற முடியும்.
சேனல் அட்மின்கள் பின்தொடர்பவர்களிடம் நேரடி கேள்விகளை கேட்டு, கருத்துக்களை பெற முடியும்.
இந்த அப்டேட்கள், வாட்ஸ்அப்பை மிகவும் வெளிப்படையான, வேகமான, ஈர்க்கக்கூடிய தொடர்பாடல் தளமாக மாற்றுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
WhatsApp missed call voice notes feature, WhatsApp AI image generation Midjourney Flux, WhatsApp photo animation update 2025, WhatsApp group video call spotlight tool, WhatsApp real-time reactions voice chat, WhatsApp status interactive stickers lyrics, WhatsApp channel engagement tools questions, WhatsApp desktop media tab file search, WhatsApp holiday season feature rollout, Meta AI upgrades WhatsApp messaging ecosystem