ஒரே போன் அழைப்பில் உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை தட்டிதூக்கும் ஹேக்கர்கள்! உஷார்
வாட்ஸ் அப் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் எப்படி புதிய வழிமுறைகளை வைத்து ஹேக் செய்கின்றனர் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகளவில் நம்பர் 1 மெசேஜிங் செயலியாக இருக்கும் வாட்ஸ் அப் மூலம் எதிர்மறையான விடயங்கள் பல அரங்கேறுகின்றன.
ஹேக்கர்கள் பல புதிய யுக்திகள் மூலம் பயனர்களின் வாட்ஸ் அப் அக்கவுண்ட்களை ஹேக் செய்கின்றனர். அதன்படி ஒற்றை போன் அழைப்பின் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை அபகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
avira
அதாவது, ஹேக்கரிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் அதன் பின் 67 அல்லது 405 என துவங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள ஹேக்கர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படும்.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி விடும்.
இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருக்க தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்புகளை ஏற்காமல் இருப்பதே நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்!
zee