CSK vs RCB : வாட்ஸ்அப் சேனலில் அடித்துக்கொள்ளும் IPL அணிகள்!
வாட்ஸ்அப் சேனலில் IPL அணிகள் போட்டிப்போட்டு தங்களது followrs ஜ அதிகரித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாட்ஸ்அப்
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.
இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
இது பல பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அப்டேட்டை வெளியிட்டு வருகின்றது.
அந்தவகையில் கடந்த மாதங்களில் வாட்ஸ்அப் இல் சேனல் என்ற ஒரு தெரிவை அறிமுகப்படுத்தி இருந்தது.
WhatsApp சேனல்
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தகவல்களை நேரடியாக பயனர்களுக்கு வழங்கும் வகையில் வாட்ஸ் அப் சேனல் என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இதில் பல பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த சேனலை உருவாக்கி பல அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய IPL கிரிக்கெட் போட்டியில் போட்டியிடும், CSK மற்றும் RCB ஆகிய இரு அணிகளும் போட்டியிட்டு தங்களது followers ஐ அதிகரித்து வருகிறார்கள்.
அதிலும் அதிக்கூடிய பயனர்களை வைத்து முதலிடத்தி்ல் இருப்பது CSK அணி தான். இவர்கள் மாத்திரம் சுமார் 2 மில்லியன் பயனர்களை வைத்துள்ளனர்.
ஆனால் RCB அணி அதை விடக் குறைவான பயனர்களை மாத்திரமே வைத்திருகின்றது.
ஆகவே இதிலும் RCB முதலிடத்திற்கு வரமுடியாது என ரசிகர்கள் ஏளனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |