WhatsAppல் ரகசிய உரையாடல்கள்! அறிமுகமானது Chat Lock வசதி
வாட்சாப் செயலியில் தற்போது புதிதாக CHAT LOCK என்ற புது அப்டேட் பயனர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
வாட்சாப்பின் புது அப்டேட்
வாட்சாப்பின் தலைமை நிறுவனமான மெட்டா தொடர்ந்து, வாட்சாப் செயலியில் புது புது அப்டேட்டை அளித்து பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள சேட்லாக் என்ற புது அப்டேட், அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.
@meta
இந்த அப்டேட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், இனி நமக்கு விருப்பப்பட்ட உரையாடல்களை யாரும் படித்து விட முடியாதபடி, அவற்றுக்கு மட்டும் தனியாக லாக் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
@meta
அதாவது குறிப்பிட்ட இந்த அப்டேட்டின் மூலம் நீங்கள் விரும்பும் உங்களது ரகசிய உரையாடல்களை பார்க்க வேண்டுமென்றால், உங்களது கை ரேகை அல்லது கடவுச் சொல்லை பயன்படுத்தி மட்டுமே பார்க்க முடியும்.
இனி பயமில்லை
இந்த அப்டேட்டிற்கு வாட்சாப் பயனர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர், மேலும் இனி யாராவது நமது ரகசிய உரையாடல்களை கண்டறிந்து விடுவார்களா என அஞ்ச வேண்டியதில்லை.
@gettyimages
இன்றைய காலத்தில் சுமார்ட் போன்களின் மூலம் ரகசியமாக திருடப்படும் தகவல்கள் பெரும் பிரச்சனையை உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையே சீரழிந்து போகும் அளவிற்கு செய்துவிடுகிறது.
இது போன்ற அப்டேட்டுகள் அது மாதிரியான சிக்கல்களிலிருந்து, நம்மை தற்காத்து கொள்ள உதவியாக இருக்கும் என வாட்சாப்பின் பயனர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.