WhatsApp-ல் விரைவில் Cryptocurrency பரிவர்த்தனை!
WhatsApp-ல் விரைவில் Cryptocurrency பரிவர்த்தனை செய்யும் வசதி அனுமதிக்கப்படவுள்ளது.
Facebook நிறுவனத்துக்கு சொந்தமான டிஜிட்டல் வாலட்டான 'Novi' வாட்ஸப்புடன் ஒருங்கிணைந்து Cryptocurrency பரிவர்த்தனை முறையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி விரைவில் மற்ற நாடுகளுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதியை குறைந்த எண்ணிக்கையிலான பயனாளர்களிடையே முதற்கட்டமாக Whatsapp பயனாளர்களின் encrypted முறையில் பணம் செலுத்த “உடனடியாகவும், பாதுகாப்பாகவும், மற்றும் கட்டணங்கள் ஏதுமின்றி” பேகாஸ் டொலர் எனும் (Paxos Dollar – USPD - stablecoin) ஸ்டேபிள் காயினைப் பயன்படுத்தி அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும்.
இந்த வசதியை வாட்ஸப் பயனர்கள் பயன்படுத்த:
1. பயனாளர்கள் உரையாடல் பகுதியில் உள்ள ப்ளஸ் (+) குறியை கிளிக் செய்யவும்.
2. அதன்பின் தோன்றும் மெனுவிலிருந்து கட்டணத்தை தேர்வு செய்யவும். அதன்மூலம் பணம் செலுத்தும்போது பயனாளர்கள் அந்தத் தொகைக்கு இணையான USDP காயினை பெறுவார்.
3. அந்தக் காயின் அமெரிக்க டொலருக்கு இணையான பணமாக பயனாளார் வங்கிக் கணக்கில் திரும்பப் பெறப்படும்.
வாட்ஸப் மூலம் பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் நோவி சிஸ்டத்தை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை.
இன்று முதல் இந்த பரிவர்த்தனை முறையை பயன்படுத்த அமெரிக்காவில் சில பயனாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.