இனி இப்படியும் பேக்கப் செய்யலாம்! விரைவில் வெளியாகவுள்ள புது அம்சம்...மார்க் ஜூக்கர்பர்க் வெளியிட்ட தகவல்
WhatsAppசெயலியில் சாட்களை புதுவிதமாக பேக்கப் செய்யும் வழிமுறை விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பை பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை ஆப்பிள் ஐகிளவுட் அல்லது கூகுள் டிரைவில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்து கொள்ள முடியும் என்று கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.