வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அடுத்தவருக்கு அனுப்புகிறவரா நீங்கள்? இது உங்களுக்கு தான்
வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கவுள்ள அசத்தலான அப்டேட்கள்.
புகைப்படங்களை தலைப்புடன் அனுப்பும் வசதி.
உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகமாக வாட்ஸ் அப் உள்ளது. இந்நிறுவனம் தங்கள் பயனர்கள் பயனடையும் வகையில் புதிய அப்டேட்களை அடிக்கடி வழங்கி வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ் அப்பில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.
GETTY IMAGES
வாட்ஸ் அப், தன் பயனாளர்களுக்கு புகைப்படம், ஆவணம், கிப் (gif) ஆகியவற்றை தலைப்புடன் சேர்த்து அனுப்பும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது வாட்ஸ் அப் குழுவில் அல்லது சேட்- ல் (chat) பயனர்கள் தங்களுக்குத் தேவையான ஆவணத்தை எளிதில் தேட உதவுகிறது.
வாட்ஸ் அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த ஒரு தகவலை ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதன் மூலம் வீடியோ அல்லது புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தவிர்ப்பதற்காக இவ்வசதியை ஏற்படுத்த உள்ளது.
cnbctv18