வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சங்கள்! இனி அப்படியே புகைப்படங்களை அனுப்பலாம்
வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா v2.21.14.16 பதிப்பில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்கவுள்ளது.
அதாவது இதுவரை வாட்ஸ்அப் செயலியில் நாம் புகைப்படங்களை அனுப்பும்போது தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். ஆனால் இனிமேல்அந்த நிலை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சங்களும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
எப்படி செயற்படுத்துவது?
- இந்த அம்சத்தை இயக்க பயனர்கள் Storage பக்கத்திற்கு சென்று Data மெனுவில் உள்ள Photo Upload Quality என்பதை கிளிக் செய்தால் போதும்.
- நீங்கள் Photo Upload Quality ஆப்ஷன்களை க்ளிக் செய்ததும், ஆட்டோ, பெஸ்ட் குவாலிட்டி, டேட்டா சேவர் என்ற மூன்று தரங்களில் புகைப்படங்களை அனுப்ப முடியும்.குறிப்பாக நீங்கள் ஆட்டோ(Auto) எனும் விருப்பத்தை தேர்வுசெய்தால், ஒவ்வொரு புகைப்படத்திற்கு சிறந்த தேர்வை வாட்ஸ்அப் கண்டறிந்து அனுப்பும்.
-
அடுத்து பெஸ்ட் குவாலிட்டி (Best Quality) என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்ப முடியும்.
-
கடைசியாக டேட்டா சேவர் (data saver) எனும் விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படங்களின் அளவை குறைத்து வேகமாக அனுப்பும்.
ஆனால் இந்த டேட்டா சேவர் விருப்பத்தை தேர்வு செய்தால் உங்களின் புகைப்படத்தின் தரம் குறைந்தவிடும்.