வெறும் WhatsApp குழுவை பல கோடி நிறுவனமாக மாற்றியவர்... முகேஷ் அம்பானி செய்த ரூ 1600 கோடி முதலீடு
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி கடந்த பல ஆண்டுகளாக வளர்ந்துவரும் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். அதில் ஒன்று தான் Dunzo.
WhatsApp குழுவாக அறிமுகம்
டன்சோ நிறுவனத்தில் மட்டும் முகேஷ் அம்பானி இந்திய மதிப்பில் சுமார் 1600 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் தற்போது பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
2014ல் Kabeer Biswas என்பவரால் நிறுவப்பட்டது டன்சோ நிறுவனம். தொடக்கத்தில் வெறும் WhatsApp குழுவாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிறுவனம், மிக விரைவிலேயே மக்களின் கவனத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
இதன் பின்னர் டன்சோ செயலி வெளியிடப்பட்டு, பல நகரங்களில் அறிமுகமானது. கபீர் பிஸ்வாஸ் ஒரு கணினி அறிவியல் பொறியாளர். பட்டப்படிப்பை முடித்த பின்னர் ஒரு நெகிழி தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் எம்பிஏ படிக்க முடிவு செய்தார். அத்துடன் ஏர்டெல் நிறுவனத்தில் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில், Hoppr என்ற நிறுவனத்தை தனியாக தொடங்க, அந்த நிறுவனத்தை Hike என்ற நிறுவனம் பெருந்தொகைக்கு வாங்கியது.
முகேஷ் அம்பானியின் கவனம்
இதுவே அவருக்கு அடுத்த கட்டத்திற்கு நகர ஊக்கமாக அமைந்தது. தொடர்ந்து, Ankur Agarwal, Dalvir Suri, and Mukund Jha ஆகியோருடன் இணைந்து டன்சோ என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.
மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை மக்களின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகம் செய்யும் நிறுவனம் இது. குறுகிய காலத்திலேயே டன்சோ மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், நிறுவனமும் பல கோடிகள் வருவாய் ஈட்டியது.
இந்த நிலையில் தான் முகேஷ் அம்பானியின் கவனம் டன்சோ மீது திரும்பியது. அவர் 200 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை டன்சோ நிறுவனத்தில் முதலீடு செய்தார். இதனால் டன்சோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு இந்திய மதிப்பில் ரூ 6400 கோடி என உயர்ந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக டன்சோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் ரூ 1800 கோடி இழப்பை எதிர்கொண்டது. அத்துடன் உயர் பொறுப்பில் இருக்கும் பலரும், சக நிறுவனர் உட்பட வேலையை விட்டு விலக தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க தாமதமாவதுடன்,
பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் கட்டாயத்திற்கு டன்சோ தள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |