2022-ல் WhatsApp அறிமுகம் செய்யும் 5 புதிய அம்சங்கள்!
WhatsApp நிறுவனம் இந்த ஆண்டு 5 புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலியை Facebook நிறுவனம் வாங்கிய பிறகு பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்களுக்கான ஃபைல் ஷேரிங் மேம்பாடு, ஆடியோ கால்களில் கூடுதல் நபர்கள் இணையும் வசதி, வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் உட்பட 5 புதிய அம்சங்களை WhatsApp அறிமுகம் செய்யவுள்ளது.
1. ஃபைல் ஷேரிங் லிமிட் 2GB-யாக உயரும்:
வாட்ஸ்அப்பில் தற்போது 100MB வரையிலான ஃபைல்களை வாடிக்கையாளர்கள் ஷேர் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வரையறையை 2 ஜிபி-யாக அதிகரிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டிருக்கிறது. அர்ஜெண்டினாவில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு இந்த வெர்ஷன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
2. ஆடியோ காலில் இனி 32 பேர் பேசலாம்:
இனி வாட்ஸ்அப் ஆடியோ கால் பேசும்போது 32 நபர்களை நீங்கள் இணைத்துக் கொள்ளலாம். தற்போதைய சூழலில் 8 பேர் வரையில் ஆடியோ காலில் இணைந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வசதி மேம்படுத்தப்படவுள்ளது.
3. குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்:
குரூப் அட்மின்களின் செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையில், குரூப்களில் அதிக ஆப்சன் மற்றும் கட்டுப்பாடுகளை வாட்ஸ்அப் கொண்டு வருகிறது. குரூப் மற்றும் குரூப் உறுப்பினர்களின் பார்வைக்கு உகந்தது அல்ல என்று அட்மின் நினைக்கும் பதிவுகளை இனி டெலீட் செய்வதற்கான ஆப்சன் இடம்பெற உள்ளது. இது குரூப்களில் ஆட்சேபகரமான, வன்முறையை தூண்டுகிற பதிவுகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுத்த உதவும்.
4. வாட்ஸ்அப்பில் இனி ரியாக்ஷன் எமோஜிஸ்:
வாட்ஸ்அப் தளத்தில் எமோஜிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. யூசர்களின் கோரிக்கையை ஏற்று இந்த மேம்பாடு வருகிறது. ஆனால், இந்த வசதி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.
5. வாட்ஸ்அப்பில் இனி ரியாக்ஷன் எமோஜிஸ்:
வாட்ஸ்அப் தளத்தில் எமோஜிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயனர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அப்டேட் வருகிறது. ஆனால், இந்த வசதி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.