ப்ளூடூத் மூலம் வாட்ஸ் அப்பில் 2GB வரை File-Sharing செய்யலாம்: மெட்டாவின் அதிரடி அறிவிப்பு
ப்ளூடூத் வழியாக வாட்ஸ் அப்பில் 2ஜிபி வரையிலான கோப்புகளை பயனர்கள் வேகமாக பரிமாற்றி கொள்ளலாம் என்ற புதிய அம்சத்தை விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்
மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப்பில் பயனர்கள் கணக்கற்ற டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படம், வீடியோ, ஆடியோ ஆகியவற்றை சேர் செய்வதுடன் அழைப்புகளையும் பயனர்களால் மேற்கொள்ள முடியும்.
இத்தகைய வாட்ஸ் அப் மெசஞ்சரை உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை வாட்ஸ் அப் செயலி தான் பிரதான பயன்பாட்டு சமூக செயலியாக மாறிவிட்டது.
இதன் மூலம் பில்லியன் கணக்கான தகவல்கள் ஒவ்வொரு நிமிடமும் பரிமாற்றப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா தங்களுடைய பயனர்களை தொடர்ந்து ஊக்கமாக வைத்து இருக்கும் விதமாக புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.
புதிய அப்டேட்
அந்த வகையில் தற்போது வாட்ஸ்ஆப் மூலம் ஸ்மார்ட்போன்களில் உள்ள ப்ளூடூத் வழியாக அருகில் இருக்கும் பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான மெமரி ஃபைல்களை ஷேர் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் இதற்காக Share Files என கொடுக்கப்பட்டு இருக்கும் அம்சத்தை தேர்வு செய்து பயனர்கள் ஃபைல்களை பகிர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சமானது கிட்டத்தட்ட கோப்புகளை பிறருக்கு ஷேர் செய்ய உதவும் ‘ஷேர் இட்’ செயலி போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் இணைய சேவைகளை பயன்படுத்தி ஏற்கனவே 2ஜிபி வரையிலான ஃபைல்களை கடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அப்டேட் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும்,இது தற்போது சோதனை பீட்டா வெர்ஷனில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |