வாட்ஸ் அப்பில் புதிய ஸ்டிக்கர் வசதிகள் அறிமுகம்: மெட்டா வெளியிட்டுள்ள அப்டேட்
வாட்ஸ் ஆப் சேனலில் இனி வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது புதிய அப்டேட்டில் அறிமுகப்படுத்த உள்ளது.
வாட்ஸ் அப் அப்டேட்கள்
சமூக கருத்து பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப், தனது பயனர்களை கவரும் வகையில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் கூட சேனல் வசதிகளை இந்தியாவில் அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியது.
இந்த சேனல் வசதிகள் மூலம் செய்திகளை தனிநபர் மற்றும் செய்தி நிறுவனங்களிடம் இருந்து தகவல்களை வாட்ஸ் அப்பில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும்.
புதிய அப்டேட்
இந்நிலையில் வாட்ஸ் ஆப் சேனலில் இனி வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது புதிய அப்டேட்டில் கொண்டு வரவுள்ளது.
சேனல் அட்மின்கள் தங்கள் பின்தொடர்பாளர்களோடு பேசுவதற்கு வசதியாக மேலும் பல அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
உண்க்களுடைய வாட்ஸ் அப்பை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் இந்த புதிய வசதிகளை பயனர்கள் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வாட்ஸ் அப் சேனலில் டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF- ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுப்ப முடியும், ஆனால் தற்போதைய புதிய அப்டேட்களால் கூடுதலான தரவுகளை பயனர்களால் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |