இந்த விடயங்களை செய்தால் WhatsApp உங்களை தடை செய்துவிடும்! எச்சரிக்கை
வாட்ஸ்அப்பின் “சேவை விதிமுறைகளின்” (Terms of Service) படி, கீழ்காணும் விஷயங்களை செய்வது உங்கள் whatsApp அக்கவுண்ட்டைதடை செய்ய நிறுவனத்தை தூண்டலாம்.
அதிக மெசேஜ்களை contact லிஸ்டில் இல்லாதவர்களுக்கு அனுப்பினால்
உங்கள் contact list-ல் இல்லாத ஒரு நபருக்கு நீங்கள் தொடர்ந்து அதிகமாக மெசேஜ்களை அனுப்பினால், WhatsApp உங்களை தடை செய்யலாம்.
அதிகம் பேரால் ப்ளாக் செய்யப்பட்டால்
பல யூஸர்கள் உங்களை block, அவர்கள் உங்கள் கான்டேக்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், WhatsApp உங்களைத் தடை செய்ய கூடும். ஏனென்றால் பல யூஸர்கள் உங்களை block செய்யும் போது உங்கள் அக்கவுண்ட்டை ஸ்பேம் மெசேஜஸ் அல்லது போலி செய்திகளின் சோர்ஸாக WhatsApp கருதலாம்.
அதிகளவு புகார்கள்
உங்கள் WhatsApp அக்கவுண்டிற்கு எதிராக பலர் புகார் அளிக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் உங்களை தடை செய்யலாம்.
ஆபாச க்ளிப்புகள்
சட்டவிரோத, ஆபாச, அவதூறான, மிரட்டல், துன்புறுத்தல், வெறுக்கத்தக்க மெசேஜ்களை" அனுப்பும் யூஸர்கள் தடை செய்யப்படுவார்கள் என்று வாட்ஸ்அப் தெளிவாக கூறுகிறது.
மால்வேர்
ஆண்ட்ராய்டு ஃபோன்களில் APK ஃபைல்ஸ் வடிவில் மால்வேரை அனுப்பினால் அல்லது பிற யூஸர்களுக்கு ஆபத்தான phishing links-களை அனுப்பினால் WhatsApp உங்கள் அக்கவுண்ட்டை தடை செய்யலாம்