தவறான மெசேஜ்களை இனி எடிட் செய்ய முடியும்! வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு
வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை உள்ளடக்கிய புதிய அப்டேட்-டை அந்த நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி
உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
தகவல்களை எளிதாக பரிமாற இந்த வாட்ஸ் ஆப் செயலி பெரிதும் உதவிகரமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
NPR
ஆனால் இந்த வாட்ஸ் ஆப் செயலி-யில் அனுப்பட்ட தவறான மெசேஜ்களை பயனர்களால் இதுவரை டெலீட் மட்டுமே செய்ய முடிந்து வந்த நிலையில், தற்போது தவறாக அனுப்பப்பட்ட மெசேஜ்களை திருத்தும் புதிய அப்டேட்டையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.
விதிவிலக்கு
மேலும் இந்த அறிவிப்பில் தவறாக அனுப்பப்பட்ட மெசேஜை மட்டும் தான் இந்த அப்டேட் மூலம் மாற்ற முடியும் என்றும், புகைப்படத்தோடு அனுப்பும் தகவலை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வசதியை பயன்படுத்த பயனர்கள் நிச்சயமாக வாட்ஸ் ஆப் செயலியை கண்டிப்பாக அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் இருக்கும் புதிய அம்சம், முதலில் ஐபோன்களுக்கு ன்களுக்க மட்டும் தான் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.