Whatsapp -ல் போட்டோ அனுப்புறீங்களா? அப்டினா இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் இருக்கும் Nearby Share போன்ற அம்சம் இனி வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
Whatsapp Share
சமீபத்தில் Whatsapp -ல் 2 GB வரை Compress செய்யப்படாத HD புகைப்படங்கள் மற்றும் பைல்களை எந்தவித Quality குறைபாடும் இல்லாமல் Share செய்யும் அம்சம் கொண்டுவரப்பட்டது. இப்போது, வாட்ஸ்அப் நிறுவனம் மீண்டும் ஒரு முறை பயனர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவுள்ளது.
Whatsapp அதன் தளத்தில், பைல் ஷேரிங் பகிர்வை எளிதாக்குவதற்கு பல வழிகளை ஆராய்ந்து வருகிறது. அந்தவகையில், புதிய அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அம்சமானது Nearby Share போன்று செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எப்போது செயல்படும்?
இந்த அம்சமானது WhatsApp Update Android 2.24.2.17 இல் உள்ள வாட்ஸ்அப் Beta பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த புதிய பைல் நியர்பை ஷேரிங் அம்சத்தை Beta மூலம் பயனர்கள் அணுக முடியும் என்று WABetaInfo தெரிவித்துள்ளது.
இதனை பயன்படுத்த பயனர்கள் புதிய பிரிவிற்குச் சென்று கோப்புகளை அனுப்பவும் பெறவும் முடியும். மேலும், உங்களது பகிர்வு பாதுகாப்பாக இருப்பதை End-to-end encryption மூலம் உறுதி செய்கிறது. குறிப்பாக உங்கள் சாதனத்தை ஷேக் செய்தால் இந்த அம்சம் உடனே ஆக்டிவேட் ஆகிவிடும்.
இந்த புதிய Nearby Share அம்சம் தற்போது beta version-ல் சோதனையில் உள்ளது. சோதனை முயற்சிகள் முடிந்தவுடன் உலகளவில் எல்லோருக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |