ரகசிய குறியீடு உட்பட வாட்ஸ்அப்பில் வெளியாகும் 5 அதிரடி அம்சங்கள்!
வாட்ஸ்அப் புதிதாக 5 அம்சங்களை விரைவில் கொண்டு வர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப்பின் பீட்டா சோதனையாளர்கள் WABetaInfoயின் அறிக்கையின்படி 5 புதிய அம்சம்களை பெற்றுள்ளனர்.
தற்போது இந்த 5 புதிய அம்சங்களும் வரும் வாரங்களில் வழக்கமான பயனர்களுக்காக வெளியிடப்படும் என WABetaInfoயின் அறிக்கை தெரிவித்துள்ளது.
Thomas Trutschel / Getty Images
சாட்களை லாக் செய்வதற்கான ரகசிய குறியீடு, Updates tabக்கான Search அம்சம், Pinned குறுந்தகவல்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சாட் இணைப்பு Menu மற்றும் அழைப்புகளில் IP முகவரியை பாதுகாக்கும் Privacy அம்சம் ஆகியவை இதில் அடங்கும்.
1. ரகசிய குறியீடு (Secret Code)
மெட்டாவுக்கு சொந்தமான செயலியானது லாக் செய்யப்பட்ட சாட்களுக்காக ரகசிய குறியீடு அம்சத்தில் செயல்படுகிறது. இந்த அம்சமானது தொலைபேசியின் முக்கிய பாஸ்வேர்ட்டில் இருந்து வேறுபட்டது.
அத்துடன் பயனர்கள் தங்கள் லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. இந்த மேம்பாடு பயனரின் உரையாடல்களின் Privacyயை யாரவது உங்கள் செல்போனை access செய்தால் கூட மேம்படுத்தும்.
லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் எப்போதும் தனிப்பிரிவில் பட்டியலிடப்படும். அதனை உங்கள் செல்போனின் PIN அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் மட்டுமே அணுக முடியும்.
2. Update tabக்கான Search அம்சம்
இப்போது Search எனும் button செயலியின் பட்டியலில் கிடைக்கக்கூடும். இதன்மூலம் Status அப்டேட்ஸ், followed channels மற்றும் இதர Verified channels ஆகியவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்க முடியும்.
3. Pinned மெசேஜஸ் அம்சம்
விரைவில், வாட்ஸ்அப்பில் உள்ள பயனர்கள் தங்கள் அரட்டை உரையாடல்களின் மேல் ஒரு செய்தியைப் Pin செய்வதன் மூலம், அதனை ஹைலைட் செய்ய முடியும். இதனால் மற்றவர்கள், முக்கியமான அல்லது அடிக்கடி குறிப்பிடப்படும் செய்திகளை அணுகுவதை எளிதாக்கும்.
4. மறுவடிமைப்பு செய்யப்பட்ட சாட் இணைப்பு மெனு (Redesigned chat attachment menu)
பயனர்கள் புதிய மாடர்ன் ஸ்டைலில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சாட் attachment menuவை பெறுவர். Updated menuவில் பல்வேறு வகையான உள்ளடக்கங்களைப் பகிர்வதற்கான செயல்முறை இன்னும் உள்ளது. ஆனால் அது இப்போது நிச்சயமாக தெளிவாக இருக்கும்.
5. அழைப்புகளில் IP முகவரியை பாதுகாப்பதற்கான Privacy அம்சம்
இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யும்போது கூடுதல் பாதுகாப்பு அடுக்குடன் பரிசோதனை செய்ய முடியும், ஏனெனில் Whatsapp உங்கள் IP முகவரியைப் பெறுவதை மற்றவர்களுக்கு கடினமாக்கும்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |