WhatsApp-ல் புதிய அம்சம் அறிமுகம்!
WhatsApp நிறுவனம் அதன் WhatsApp Business பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதுகிறது.
WhatsApp மிகவும் சர்ச்சைக்குள்ளான அதன் ப்ரைவசி பாலிசிகளால் சில சிக்கல்களை சந்தித்தது. இதனால் அதன் பயன்பாடு குறைந்துவிடும் என்றும், அதற்கு பதிலாக அதன் போட்டியாளர்களான Telegram, Signal போன்ற செயலிகளுக்கு மக்கள் மாறுவார்கள் என பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால், Meta-வுக்குச் சொந்தமான பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp, சர்ச்சைகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக செயலாற்றி, தற்போது மீண்டும் உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் சேவைகளில் ஒன்றாக நீடித்து வருகிறது.
WhatsApp எந்தவொரு நேரத்திலும் கீழ்நோக்கி செல்லாமல் இருக்க மிக முக்கிய காரணங்களில் ஒன்று, அதில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை கொண்டு வருவதன் மூலம் பயனர்களை தன் தளத்தின் கீழ் மிகவும் ஆக்டிவ் ஆக வைத்திருப்பது தான்.
அதனொரு பகுதியாக WhatsApp நிறுவனம் அதன் WhatsApp Business பயனர்களுக்கான புதிய சேர்ச் பில்டர்களை (Search Filters) அறிமுகம் செய்ய உள்ளது, மற்றும் அதற்கான சோதனைகளையும் நடத்தி வருகிறது.
அறியாதோருக்கு, வாட்ஸ்அப் பிசினஸ் (WhatsApp Business) என்பது தத்தம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளால் பயன்படுத்தப்படும் WhatsApp-ன் ஒரு மாற்று ஆப் ஆகும்.
வணிக உரிமையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான பிஸ்னஸ் ப்ரொபைல்கள் (Business profiles), ஆட்டோமேடட் ரிப்ளைஸ் (Automated Replies), வாழ்த்துச் செய்திகள் (Greetings) மற்றும் பல அம்சங்களுடன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வருகிறது.
இதற்கிடையில் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படுவதற்காக சோதிக்கப்படும் அம்சங்களை பற்றி துல்லியமான அறிக்கைகளை / தகவல்களை வெளிப்படுத்தும் வாட்ஸ்அப்பீட்டாஇன்போவின் (WABetaInfo) கூற்றுப்படி, வாட்ஸ்அப் பிசினஸ் ஆப் ஆனது Android மற்றும் iOS ஆகிய இரண்டிலுமே மேலதிக சேர்ச் பில்டர்களை அறிமுகம் செய்யவுள்ளது.
தற்போது வரை, வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் தங்கள் தேடல் முடிவுகளை (Search Result) புகைப்படங்கள், வீடியோக்கள், இணைப்புகள், ஜிஃப்கள், ஆடியோ பைல்கள் மற்றும் / அல்லது டாகுமெண்ட்களைக் கொண்ட மெசேஜ்களாக சுருக்கிக் கொள்ளலாம்.
வரவிருக்கும் புதிய பில்டர்களை பொறுத்தவரை, பெறுநர் உங்கள் காண்டாக்ட்ஸ் பட்டியலில் உள்ளாரா, மெசேஜ் வாசிக்கப்பட்டதா இல்லையா என்பதன் அடிப்படையில் நீங்கள் மெசேஜ்களை பில்டர் செய்ய முடியும். ஏற்கனவே உள்ள பில்டர்களைப் போலவே, வரவிருக்கும் புதிய பில்டர்களையும் சேர்த்து, பயனர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்தலாம்.
வரவிருக்கும் புதிய பில்டர்கள் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்-இன் ஸ்டாண்டர்ட் வாட்ஸ்அப் ஆப்பில் எப்போது வரும் என்பது பற்றி தெளிவான தகவல் எதுவும் இல்லை.
சமீபத்தில் இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் நிறுவனமானது, வாட்ஸ்அப் வழியாக பயனர்கள் மெசேஜ்களை பெறுவதற்கான புதிய வழியையும் சோதித்தது.
இந்த புதிய வழியின் கீழ், விரைவில் ஐபோன் பயனர்களுக்கு வரவிருக்கும் அப்டேட்டில், வாட்ஸ்அப் பயனர்கள் பெறும் மெசேஜ் சார்ந்த நோட்டிஃப்பிகேஷனில் அனுப்புனரின் ப்ரொபைல் படத்தை பார்க்க முடியும்.
இது தொடர்பாக வாட்ஸ்அப்பீட்டாஇன்போ முன்பு பகிர்ந்த ஒரு ஸ்கிரீன்ஷாட்டின் படி, இந்த புதிய அம்சமானது, பயனர்கள் ஒரு தனிப்பட்ட நபரிடம் இருந்தோ அல்லது ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் இருந்தோ மெசேஜைப் பெறும்போது, அது சார்ந்த அறிவிப்பில் அனுப்புநரின் சிறிய ப்ரொபைல் புகைப்படத்தைப் பார்க்க அனுமதிக்கும்.