Whatsapp நிறுவனத்தின் புதிய அப்டேட்! இனி ஓர் குழுவில் 1,024 பேர் வரை பங்கேற்கலாம்
Whatsapp நிறுவனம் தற்போது புதிய வசதியாக Communities வசதியை இன்று அறிமுகம் செய்துள்ளது.
இதனால் இனி குழுவாக 1,024 பேர் மற்றும் 32 கொண்ட குரூப் வீடியோ கால் பேசலாம் என்று கூறப்படுகின்றது.
இந்த புதிய வசதியை Meta நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸகேர்பேர்க் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
இந்த கம்யூனிட்டிஸ் ஆப் இன்று அறிமுகம் செய்வதாகவும் இதன்மூலம் குழுவிற்குள்ளாகவே சிறிய குழுக்கள் போன்ற பல வசதிகள் உள்ளன.
32 பேர் அடங்கிய வீடியோ காலிங் வசதியும் இடம்பெற்றுள்ளன.
இதனுடன் சேர்த்து குழுவிற்குள் தேர்தல் நடத்தவும் முடியும். இதில் குழுவிற்குள் உள்ள அனைவரும் அவர்களுக்கான வாக்கு செலுத்தவும் முடியும்.
அதுமட்டுமின்றி ஒரு குழுவில் தற்போது இருக்கும் 512 பேர் என்ற எண்ணிக்கை 1,024 என அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
மேலும் இதில் 32 பேர் கொண்ட குரூப் வீடியோ காலிங் வசதி அனைத்து Android மற்றும் iOS பிளேட்போர்மிலும் வேலை என்று குறிப்பிடப்படுகின்றது.