1 நிமிடத்திற்கு மெசேஜ்களை வீடியோவாக அனுப்பலாம்: வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் 1 நிமிடத்திற்கு வீடியோ மெசேஜ் அனுப்பும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்த அப்டேட்கள்
தகவல் பரிமாற்ற சமூக செயலியான வாட்ஸ் அப்பில் அதன் மெட்டா நிறுவனம் அடுத்தடுத்து புதிய அப்டேட்டுகளை கொடுத்து, பயனர்களுக்கான விருப்பங்களை பூர்த்தி செய்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான அப்டேட்டில், ஒரே சாதனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை பயனர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டால் பயனர்கள் மிக எளிதாக அவர்களது ஒரு வாட்ஸ் அப் கணக்கில் இருந்து மற்றொரு வாட்ஸ் அப் கணக்குக்கு ஒரு தொடுதலில் செல்ல முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ மெசேஜ்
இந்நிலையில் கூடுதலாக, வீடியோ மெசேஜ் என்ற புதிய மற்றொரு அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் 1 நிமிடம் வரை மெசேஜ்களை வீடியோவாக பதிவு செய்து அனுப்ப முடியும்.
தற்போது வாட்ஸ் அப்பின் பீட்டா வெர்ஷனில் வெளியாகியுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து போன்களும் வழங்கப்படும் என அதன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.