Whatsapp-ல் பழைய Message-களை தேதி வாரியாக தேடும் புதிய அம்சம் அறிமுகம்
Whatsapp-ல் புதிய அம்சம் மூலம், யூசர்கள் தேதியை கொடுத்து WhatsApp -ல் குறிப்பிட்ட Message அல்லது Media-வை தேடலாம்.
Chat-ல் பழைய Message-களை தேடுவதற்கு Scrolling செய்யாமல் ஒரு குறிப்பிட்ட தேதியை மட்டும் தேர்வு செய்து, தேவையான செய்தியை தேடிக் கொள்ளும் வகையில் புதிய அப்டேட் வெளியிடுபட்டுள்ளது.
இந்த அப்டேட் தற்போது Android மற்றும் iPhone பயனர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் WhatsApp இணைய பயனர்களுக்கும், அதாவது PC அல்லது Mac -ல் WhatsApp ஐப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
குறிப்பிட்ட தேதியிலிருந்து WhatsApp செய்தியைத் தேட, Chating அல்லது குழுவிற்குச் சென்று search என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Android Phone-களில், மேல் வலது மூலையில் ஒரு Calendar icon-ஐ காண்பீர்கள். ஐபோனில் கீழ் வலது மூலையில் இந்த Calendar icon ஐகான் இருக்கும்.
இந்த Calendar icon-ஐ Click செய்து, தேதியைத் தேர்ந்தெடுக்கவும், குறிப்பிட்ட தேதியிலிருந்து வரும் செய்திகளுக்கு WhatsApp தானாகவே உங்களை அழைத்துச் செல்லும்.
குறிப்பாக பல ஆண்டுகளாக WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு, பழைய Message-களை WhatsApp எளிதாகப் பார்க்க இது உதவுகிறது.
WhatsApp யூசர்களும் இந்த அம்சத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |