வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதில் புதிய அப்டேட்! இதை எதிர்பார்க்கவே இல்லையே
வாட்ஸ் அப்பில் யூஸர்கள் தங்கள் மொபைல் நம்பருக்கே பணம் அனுப்பும் அம்சம்.
இந்த அம்சம் அப்டேட் செய்யப்பட்டால் பல யூஸர்களுக்கு உதவியாக இருக்கும்.
வாட்ஸ் அப்பில் அட்டகாசமாக புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது இருக்கும் வாட்ஸ்அப் செட்டிங் யூஸர்கள் தங்கள் சொந்த நம்பருகே மெசேஜ்களை அனுப்ப அனுமதிக்காது. தற்போது யூஸர்கள் தங்கள் மொபைல் நம்பரை தொடர்ந்து wa.me/91 என்ற URL-ஐ பயன்படுத்தி தங்களுக்கு மெசேஜ்களை அனுப்பி கொள்ளலாம்.
ஆனால் உங்கள் சொந்த ஃபோன் நம்பருடன் கூடிய பிரைமரி டிவைஸில் மட்டுமே இந்த Chat தோன்றும் என்பதால் இது பல டிவைஸ்களுக்கு செட் ஆகாது. இருப்பினும் இதற்கு ஒரு தீர்வை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள பர்சனல் சேட்டை-ஐ தேடி மற்றும் Tap செய்வதன் மூலம் யூஸர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ்களை அனுப்ப வாட்ஸ்அப் அனுமதிக்கும் என்று WaBetaInfo தெரிவித்துள்ளது.
dnaindia
இந்த அம்சம் அப்டேட் செய்யப்பட்டால் பல யூஸர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஏனென்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட சில முக்கிய விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் அடிக்கடி பலருக்கு நேருகிறது.
அதிக நேரம் வாட்ஸ்அப் பயன்படுத்துவதால், அதை பயன்படுத்தும் போதெல்லாம் முக்கிய விஷயங்கள் அடங்கிய டெக்ஸ்ட் , அடிக்கடி கண்ணில் சிக்கி மிக எளிதாக நினைவில் வைத்து கொள்ள முடியும்.