WhatsAppல் இனி இதை மாதிரி ஸ்டேட்டஸ் வைக்க முடியாது! அதிரடி அப்டேட்
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் ஸ்டேட்டஸ்-ஐ ரிபோர்ட் செய்யும் வசதி விரைவில் வெளியாகவுள்ளது.
சர்ச்சைக்குரிய ஸ்டேட்டஸ்
இது தொடர்பான சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த வசதி கணினி அல்லது லேப்டாப் சாதனங்களில் டெஸ்க்டாப் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது.
புது அப்டேட் மூலம் பயனர்கள் எதிர்கொள்ளும் போலி அல்லது சர்ச்சைக்குரிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை ரிபோர்ட் செய்யலாம். ஸ்டேட்டஸ் பகுதியில் உள்ள புது மெனுவில் ரிபோர்ட் செய்வதற்கான ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
file/dna
பீட்டா வெர்ஷனஷில்
ரிபோர்ட் செய்யப்படும் ஸ்டேட்டஸ் பற்றிய விவரங்கள் வாட்ஸ்அப்-க்கு அனுப்பப்படும். இவ்வாறு என்க்ரிப்ட் செய்யப்படும் குறுந்தகவல்களை யாராலும் பார்க்க முடியாது. தற்போது இந்த அம்சம் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷனஷில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த அம்சம் எதிர்கால அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.