இதை மட்டும் செய்யாதீர்கள்.! உங்கள் WhatsApp கணக்கு அறிவிப்பின்றி நீக்கப்படலாம்! எச்சரிக்கை செய்தி
நீங்கள் இந்த விடயங்களைச் செய்தால், உங்கள் WhatsApp கணக்கு அறிவிப்பின்றி இடைநிறுத்தப்படலாம் அல்லது நீக்கப்படலாம், அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் WhatsApp ஒன்றாகும். மக்கள் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்புகொள்வது மட்டுமல்லாமல், தங்கள் வணிகத்தை நடத்தவும் மற்றும் வேலைகளை ஒருங்கிணைக்கவும் இந்த தகவல் தொடர்பு செயலியை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், வாட்ஸ்அப் உங்கள் கணக்கை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் அல்லது நீக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 20.7 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது, எனவே நீங்கள் வாட்ஸ்அப்பின் சேவைகளை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால், இவற்றைச் செய்வதைத் தவிர்க்கவும்.
நீங்கள் 'WhatsApp Plus' பயன்படுத்தினால் வாட்ஸ்அப் உங்கள் கணக்கை இடைநிறுத்தலாம்.
தெரியாதவர்களுக்கு, வாட்ஸ்அப் பிளஸ் என்பது வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வமற்ற பதிப்பாகும், இது பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களை அம்சங்களை வழங்குகிறது.
இதைப் பயன்படுத்துவதன்முலம் ஸ்டேட்டஸை மறைக்கலாம், வரம்பின்றி புகைப்படங்களை அனுப்பலாம், வாட்ஸ்அப் வரம்பை மீறி குழுக்களை உருவாக்குதல் போன்ற கூடுதல் அம்சங்களை அனுபவிக்கலாம்.
ஒருவேளை உங்கள் வாட்ஸ்அப் கணக்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டால் அதை எவ்வாறு தடைநீக்குவது?
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்கள் தடுக்கப்பட்ட கணக்கை வாட்ஸ்அப் முற்றிலுமாக தடை செய்யும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஒருவேளை உங்கள் வாட்ஸ்அப் கணக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால், உங்களிடம் அதிகாரப்பூர்வமற்ற வாட்ஸ்அப் கணக்கு இருந்தால், நிரந்தர நீக்கத்தை தவிர்க்க உடனடியாக அதை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும்.