WhatsApp-ஐ தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?

Tamil WhatsApp Language Settings Regional Language
By Ragavan Jan 08, 2022 11:37 AM GMT
Report

தமிழ் உள்ளிட்ட மற்ற பிராந்திய மொழிகளில் WhatsApp-ஐ பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Meta-க்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மான WhatsApp-க்கான மிகப்பெரிய மார்க்கெட்களில் இந்தியாவும் ஒன்றாகும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி, பெங்காலி, ஒரியா என பல பிராந்திய மொழிகள் இந்தியாவில் உள்ளன.

அதேபோல் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல் வேறு மொழிகள் பேசப்படுகினறன. அதற்கு ஏற்ப ஒரு பரந்த பயனர் தளத்தை பூர்த்தி செய்ய, WhatsApp பல முக்கிய பிராந்திய மொழிகளில் பல ஆப்ஷன்களை வழங்குகிறது.

அதற்கு ஏற்ப பயனர்கள் தங்களுக்கு ஏற்ற மொழியில் WhatsApp-ஐபயன்படுத்த முடியும். அதற்கு நம் ஸ்மார்ட்போனில் சில மாற்றங்களை செய்தால் போதும்.

இப்போது, WhatsApp-ன் மொழியை (language of WhatsApp) மாற்ற 2 வழிகள் உள்ளன. முதலாவது உங்களது ஸ்மார்ட் போனின் மொழியை முழுவதுமாக மாற்றுவது.

இரண்டாவது வழி WhatsApp-ன் மொழியை மட்டுமே மாற்றுவது.

வாட்ஸ்அப் தற்போது iPhone இல் 40 மொழிகளுக்கும் மற்றும் Android டிவைஸ்களில் 60 மொழிகளுக்குமான மொழி ஒருங்கிணைப்பை (language integration) செயல்படுத்தி உள்ளது.

இது உங்கள் டிவைஸில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியை பொறுத்தது. உதாரணமாக நீங்கள் மொழியை தமிழுக்கு மாற்றினால், WhatsApp தானாகவே தமிழ் மொழியில் செயல்படத் தொடங்கும். உங்கள் வாட்ஸ்அப் WhatsApp Web-ல் தமிழ் மொழியே பிரதிபலிக்கும்

. WhatsApp ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-ல் மட்டுமல்ல KaiOS-ல் இயங்கும் போன்களை கொண்ட யூஸர்களும் பயன்படுத்த கிடைக்கிறது.

WhatsApp தானாகவே ஸ்மார்ட் போனின் இயல்பு மொழியை ஏற்று கொள்கிறது. எனவே, நீங்கள் மொபைலின் மொழியை தமிழ், பெங்காலி அல்லது வேறு எந்த மொழியிலும் மாற்றி கொண்டாலும் அந்த மொழியில் வாட்ஸ்அப் தானாகவே தோன்றும்.

Android அல்லது iOS போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களில் மொழியை மாற்றுவதற்கான படிப்படியான முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.,

Android-ல் மொழிகளை மாற்றுவது எவ்வாறு.?

  • உங்கள் மொபைலின் Settings-ற்கு செல்லவும்
  • System-க்கு சென்று language & input என டைப் செய்யவும்
  • பின் language & input-ல் இருந்து Languages என்பதை செலக்ட் செய்யவும்
  • Add a language என்பதை டேப் செய்து உங்கள் விருப்ப மொழியை தேர்ந்தெடுக்கவும்.

iPhone-ல் மொழிகளை மாற்றுவது எவ்வாறு..?

  • iPhone-ல் Settings-ற்கு செல்லவும், பின் General-லுக்கு சென்று Language & Region-ஐ செலக்ட் செய்யவும்.
  • பின் iPhone Language என்பதற்கு சென்று அதில் தோன்றும் மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து Change to என்பதை டேப் செய்யவும்.

KaiOS பயனர்களுக்கு..

  • Settings-ல் Personalisation என்பதை செலக்ட் செய்யவும்
  • கீழ் நோக்கி ஸ்க்ரால் செய்து Language-ஐ செலக்ட் செய்யவும்
  • நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து Ok என்பதை அழுத்தவும்

இரண்டாவது வழியான WhatsApp-ல் நீங்கள் விரும்பும் மொழியை மாற்ற விரும்பினால் செய்ய வேண்டியது..

  • WhatsApp-ற்கு சென்று settings-ஐ ஓபன் செய்யவும்.
  • Chats-ற்கு சென்று App language-க்கு செல்ல வேண்டும்.
  • பின்னர் லிஸ்ட்டில் இருக்கும் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US