வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள்: புதிய மாற்றம் தொடக்கம்!
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பை வருமானமடைய புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
அதன் புதிய Android beta பதிப்பு (v2.25.21.11) மூலமாக, Status Ads மற்றும் Promoted Channels ஆகிய இரு விளம்பர அம்சங்களை சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு வெளியிடத் தொடங்கியுள்ளது.
Status Ads என்றால் என்ன?
இது Instagram Stories Ads போலவே, WhatsApp Status-ல் விளம்பரங்களை இடும் புதிய அம்சமாகும். வாட்ஸ்அப் பயனர்களின் ஸ்டேட்டஸ்களுக்கு இடையில் "Sponsored" என குறிக்கப்பட்ட விளம்பரங்கள் இடம் பெறும்.
இந்த விளம்பரங்களை பார்க்க விருப்பமில்லாதவர்கள், அந்த விளம்பரதாரரை 'Block' செய்யும் வசதி பெறுவர்.
Promoted Channels
வழக்கமான சேனல்கள் போல இல்லாமல், பணம் செலுத்தி பொதுச் சேனல்களை மேம்படுத்தும் (Boost) வசதியும் அறிமுகமாகிறது. இவை WhatsApp Directory-யில் முன்னிலையைப் பெறும் வகையில் "Sponsored" என குறிக்கப்படும்.
தனியுரிமைக்கு பாதிப்பு இல்லை
WhatsApp நிறுவனம் உறுதியாக கூறியது என்னவெனில், இவை தனிப்பட்ட சாட்டிங்கை (Private Chats) பாதிக்காது.
விளம்பரங்கள் Status மற்றும் Public Channels போன்ற இடங்களில் மட்டுமே தோன்றும். மேலும், முன்னர் வெளியான beta version (2.25.19.15)-ல், Ads transparency reports வசதியும் சோதிக்கப்பட்டது.
இவை வாட்ஸ்அப்பில் உள்ள சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு (creators) மிகுந்த ஆதாயமாக அமையலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
WhatsApp Status Ads rollout, WhatsApp Promoted Channels, WhatsApp ads Android beta, Meta WhatsApp monetisation, WhatsApp sponsored content, WhatsApp business tools 2025, WhatsApp ad transparency, WhatsApp creator economy, WhatsApp channel promotion, WhatsApp privacy with ads