வாட்ஸ் அப்பில் உடனே இதை செய்யுங்கள்! இல்லேன்னா இழப்பு உங்களுக்கு தான்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ்அப் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யுமாறு சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வாட்ஸ்அப்பை பல பயனர்கள் பயன்படுத்துவதால், மோசடிக்காரர்களால் ஒரே நேரத்தில் பலரை குறிவைக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது. பல்வேறு பாதுகாப்பு சோதனைகள் உள்ளபோதிலும், ஹேக்கர்கள் மற்றும் ஸ்கேமர்கள் எப்போதும் சந்தேகத்திற்கு இடமில்லாத பயனர்களைத் தாக்குவதற்கான வழியைக் கண்டுபிடிக்கின்றனர். இந்த ஹேக்கர்களால் பாதிக்கப்படும் பயனர்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர்.
இதிலிருந்து தப்ப வாட்ஸ்அப் பயனர்கள் செயலியில் வழங்கப்பட்டுள்ள சிறந்த பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யுமாறு எச்சரித்துள்ளனர். அதன்படி முக்கிய செட்டிங் ஆக்டிவ் செய்ய வேண்டியது வாட்ஸ் அப்பில் அவசியமாகிறது.
thequint
அது டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆகும். இதன் மூலம், ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அல்லது சைபர் தாக்குதல்களுக்கு பலியாகும் வாய்ப்புகள் பன்மடங்கு குறைக்கப்படுகின்றன.
செயல்படுத்துவது எப்படி?
வாட்ஸ் அப் செட்டிங்ஸ் செல்லவும்.
பின்னர் அகவுண்ட்டில் டேப் செய்து, டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆப்ஷனில் செல்லவும்.
இப்போது அதை எனேபிள் செய்து, உங்களுக்கு விருப்பமான ஆறு இலக்க PIN ஐ உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.
மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க விரும்பவில்லை என்றால், நீங்கள் அணுகக்கூடிய மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும். அல்லது தவிர் என்பதை டேப் செய்ய வேண்டும். அதன் பின்னர் நெக்ஸ்ட் என்பதை டேப் செய்ய வேண்டும்.
இறுதியாக, மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்து சேமி அல்லது முடிந்தது என்பதைத் டேப் செய்யவும்.
whatsapp