வாட்ஸ் ஆஃப்பில் இனி ஆன்லைன் ஸ்டேட்டஸ் தெரியாது: மெட்டா நிறுவனத்தின் புதிய அப்டேட்: பயனாளர்கள் உற்சாகம்!
மெட்டா நிறுவனத்தின் முன்னணி தகவல் பரிமாற்று சமூக செயலியான வாட்ஸ் ஆஃப், தங்களது பயனர்களுக்கு வாட்ஸ் ஆஃப் செயலியின் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் புதிய அப்டேட்டை வழங்க போவதாக தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ் ஆஃப் நிறுவனம் இணைந்ததில் இருந்து அடுத்தடுத்த புதிய அப்டேட்களை வாட்ஸ் ஆஃப் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆஃப் நிறுவனம் தங்களது புதிய அப்டேட் குறித்த தகவலை ட்வீட் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இனி வாட்ஸ் ஆஃப் பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆஃப் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் புதிய வசதியை பெற்றுள்ளனர்.
இந்த புதிய அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனி குறிப்பிட்ட நபருக்கோ அல்லது மொத்தமாகவோ தங்களது ஆன்லைன் இருப்பை மறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.
பொதுவாக தங்களது இறுதி இருப்பை பிறரிடம் இருந்து மறைக்கும் அம்சத்தை வாட்ஸ் ஆஃப் நிறுவனம் முன்னதாகவே கொண்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய அப்டேட் மூலம் பயனர் முழுவதுமாக தங்களது இருப்பை பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக WABetaInfo அவர்களது வலைதள பக்கத்தில் புதிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளது.
இந்த ஸ்கிரீன்ஷாட்டுக்கு இணங்க, WABetaInfo ஆனது, நாம் கடைசியாகப் பார்த்த அமைப்புகளுக்குள்ளேயே நாம் ஆன்லைனில் இருக்கும்போது யார் பார்க்கலாம் என்பதை உள்ளமைக்க முடியும் என்று கூறியது: “அனைவரும்” மற்றும் சிலருக்கு மட்டும் என்ற வசதி போல. எடுத்துகாட்டாக தொடர்பில் இருப்பவருக்கு மட்டும் என்ற வசதியை நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது தொடர்பு இல்லாதவர்கள் பார்க்க முடியாது.
கூடுதல் செய்திகளுக்கு: ஓரே தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் பலி: உக்ரைன் நடத்திய அதிரடி தாக்குதல்!
மேலும் இந்த வசதிகள் இன்னும் சோதனை நடைமுறையில் இருப்பதால் விரைவில் இந்த அப்டேட் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.