வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ள செய்திகளை schedule செய்யும் வசதி
whatsapp users may schedule text, photos, videos: வாட்ஸ்அப்பில் செய்திகளை உடனுக்குடன் அனுப்பாமல்schedule செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.
வாட்ஸ்அப்பில் schedule செய்யும் வசதி
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பயனர்கள் அனுப்பும் செய்தியை உடனுக்குடன் அனுப்பாமல், Schedule செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், பயனர்கள் உரையாடல்கள், புகைப்படம், வீடியோ போன்றவற்றை எந்த நாளில் எந்த நேரத்தில் அனுப்ப வேண்டும் என்பதை Schedule செய்து கொள்ள முடியும்.
ஒரு நேரத்தில், ஒரு புகைப்படம் அல்லது ஒரு வீடியோவை மட்டுமே இவ்வாறு schedule செய்ய முடியும்.
அனுப்ப வேண்டியதை தட்டச்சு செய்துவிட்டு, அதை அழுத்திப்பிடித்தால், செய்தி அனுப்பப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தெரிவு தோன்றும்.

10 நிமிடங்கள் முதல் 2 வாரங்கள் வரை இவ்வாறு Schedule செய்து அனுப்ப முடியும். நேரம் வந்தவுடன், செயலி மூடப்பட்டிருந்தாலும் அல்லது அனுப்புபவரின் தொலைபேசியில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், வாட்ஸ்அப் தானாகவே செய்தியை அனுப்பும்.
குழுவிலும் இந்த அம்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த செய்தி schedule செய்யப்பட்ட போது குழுவில் உறுப்பினர்களுக்கு மட்டுமே அது செல்லும் எனவும், அதன் குழுவில் இணைந்தவர்களுக்கு செல்லாது எனவும் கூறப்படுகிறது.
Schedule செய்தவற்றை நீக்கும் வசதியும் உள்ளது. பயனர்கள் தாங்கள் திட்டமிட்ட செய்திகளை அனுப்புவதற்கு முன்பு அவற்றைப் பார்க்கவும் நீக்கவும் ஏதுவாக, அரட்டைத் தகவல் திரையில் ஒரு பிரத்யேகப் பகுதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தக்கூடும்.
தற்போது சோதனை முறையில் பீட்டா பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.