view once அம்சமா? அப்படி என்றால் என்ன? WhatsApp வெளியாக இருக்கும் அசத்தல் அம்சம்! எப்படி பயன்படுத்துவது?
WhatsApp நிறுவனம் நீண்ட நாள் சோதனைக்குப் பின்பு தற்பொழுது இந்த புதிய view-once சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு பொதுவாகக் கிடைக்கும் படி, புதிய அப்டேட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த 'view-once' அம்சம் தற்பொழுது அனைவருக்கும் அணுகக் கிடைக்கிறது.
இந்த புதிய வியூ ஒன்ஸ் அம்சம் தற்பொழுது ஐபோன் பயனர்களுக்கான இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் வெர்ஷன் 2.21.150 வழியாக அணுகக் கிடைக்கிறது.
அதேபோல், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் புதிய வாட்ஸ்அப் அப்டேட் வெர்ஷன் 2.21.14.24 மூலம் பயன்படுத்தக் கிடைக்கிறது.
இது ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் வழியாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்த உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தால் மட்டும் போதுமானது.
சிறப்பு என்ன?
- view once அம்சத்தைப் பயன்படுத்திப் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் ஒரு பயனர் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்.
-
அவர்கள் அந்த மீடியா மெசேஜ்ஜை பார்த்த பின்னர் சாட்டில் இருந்து அது தானாக நீங்கிவிடும்.
மேலும், அது பெறுநரின் புகைப்படங்கள் அல்லது கேலரியில் சேமிக்கப்படாது .
- view once மெசேஜ்களை ஆப்பின் வழியாக மற்றொருவருக்கு அனுப்பவும் முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இதை ஸ்க்ரீன் ஷாட் அல்லது ஸ்க்ரீன் ரெகார்டர் மூலம் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
எப்படிப் பயன்படுத்துவது ?
- வழக்கம் போல் உங்கள் சாட்டில் இருந்து மீடியா கோப்புகளை அனுப்புவது போன்றே இதை நீங்கள் அனுப்பலாம். ஆனால், ஃபைலை அனுப்புவதற்கு முன்பு கேப்ஷன் பார் அருகில் தோன்றும் புதிய '1' ஐகானைத் கிளிக் செய்ய மறக்காதீர்கள்.
- 1 ஐகானை தட்டுவதன் மூலம் உங்கள் காண்டாக்ட்களுக்கு நீங்கள் அனுப்பும் மீடியா செய்தியானது வியூ ஒன்ஸ் அம்சத்தின் கீழ் அவர்களுக்கு அனுப்பத் தயாராகிவிடும். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு போட்டோ அல்லது வீடியோவை நீங்கள் எளிதாக view once அம்சத்தின் கீழ் கொண்டு வர முடியும்.
- இந்த புதிய அம்சத்தை ட்ரை செய்து உங்களின் அனுபவத்தை எங்களுடன் கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.