வாட்ஸ்அப்-ஐ ஹேக் செய்வதை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சம்!
ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது.
பாதுகாப்பு அம்சம்
வாட்ஸ் அப் கணக்குகளை ஹேக் செய்து மோசடிகள் நடைபெறுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பில் பாதுகாப்பு அம்சங்கள் தேவை என்ற கருத்து நிலவுகிறது.
தனிப்பட்ட தகவல்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதால் பயனாளர்கள் புதிய அம்சத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே பயனாளர்களின் தகவல்களுக்கு பாதுகாப்பை அளிக்க வாட்ஸ் அப் நிறுவனம் பீட்டா மூலம் பரிசோதனை ஒன்றை செய்து வருகிறது.
AP Photo
அதாவது, வாட்ஸ் அப்பில் Log in செய்ய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறக்கூடிய OTP எண்ணை உள்ளிட வேண்டும்.
அப்போது தான் Log in செய்ய முடியும். ஆனால், புதிய அம்சத்தின் மூலம் Email ID மூலமாக verify செய்ய வேண்டும்.
ஒருவேளை செல்போன் திருடுபோனாலோ அல்லது வேறு காரணங்களுக்காக Whatsapp அணுகலை இழந்துவிட்டாலோ, இந்த Email verification என்பது உதவியாக இருக்கும். மேலும், இந்த கூடுதல் பாதுகாப்பு அம்சம் மூலம் நீங்கள் உங்கள் Accountஐ வேறொரு சாதனத்தில் இருந்து பயன்படுத்தலாம்.
ஹேக்கர்களுக்கு செக்
Email verification என்பது ஹேக்கர்களுக்கு வைக்கப்பட்ட செக் என்று கூறலாம். ஏனெனில், Sim Cloning பயன்படுத்தி வாட்ஸ் அப் கணக்குகளை ஹேக் செய்வது இனி நடக்காது என்று கூறப்படுகிறது.
WAbetainfo வழங்கிய தகவலின்படி, இந்த Email verification 2.23.16.15 என்ற வாட்ஸ் அப் Versionயில் கிடைக்கிறது. ஆனால், சோதனைக்கு பிறகு இந்த அம்சம் வேலைக்கு ஆகாது என்று வாட்ஸ்அப் முடிவு செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.
எனினும், வாட்ஸ் அப் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு தொடர்ந்து ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |