ஒரு மாதம் தான் கெடு! இந்த 18 ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் இயங்காது
அக்டோபர் 24 முதல் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பு 4.1 அல்லது அதற்கு மேற்பட்ட பழைய ஆண்ட்ராய்டு வெர்சன்களில் வாட்ஸ்அப் இயங்காது.
வாட்ஸ்அப் அறிவிப்பு
உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன்களில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டு OS -யில் தான் இயங்கி வருகிறது.
இதில் பாதுகாப்பு மற்றும் அதன் அம்சங்களை மேம்படுத்துவதற்காக ஆண்டிராய்டு புது அம்சங்களை ஒவ்வொரு வருடமும் கொண்டு வருகிறது. இதில், ஒரு சில ஆண்டிராய்டு வெர்சன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனர் அனுபவம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், WhatsApp அதன் தளங்களை அடிக்கடி புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளுடன் மேம்படுத்துகிறது.
அதன்படி, வாட்ஸ்அப் தரப்பிலிருந்து, அக்டோபர் 24 முதல் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பு 4.1 அல்லது அதற்கு மேற்பட்ட பழைய ஆண்ட்ராய்டு வெர்சன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டும் என்றால் ஆண்ட்ராய்டு 5.0 வெர்ஷன் இருக்க வேண்டும்.
லிஸ்ட்
- Sony Xperia Z
- LG Optimus G Pro
- Samsung Galaxy S2
- Samsung Galaxy Nexus
- HTC Sensation
- Motorola Droid Razr
- Sony Xperia S2
- Motorola Xoom
- Samsung Galaxy Tab 10.1
- Asus Eee Pad Transformer
- Acer Iconia Tab A5003
- Samsung Galaxy S
- HTC Desire HD
- LG Optimus 2X
- Sony Ericsson Xperia Arc3
- Nexus 7 (upgradable to Android 4.2)
- Samsung Galaxy Note 2
- HTC One
ஆண்டிராய்டு வெர்ஷனை எப்படி செக் செய்யலாம்? உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், செட்டிங் (Setting) பகுதிக்கு சென்று About பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு, Andorid version என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போது, உங்களது சாதனம் என்ன வெர்ஷன் என்பதை திரையில் காண்பிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஐபோன்களை பொறுத்தவரை இதில் எந்த மாற்றமும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |