ஸ்மார்ட்போன் இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது எப்படி தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்
தற்போது இருக்கும் நவீன உலகில் வாட்ஸ் ஆப் என்பது ஒரு அத்தியாவசிய தேவை போன்று ஆகிவிட்டது. வாட்ஸ் ஆப் இல்லை என்றால், அன்றைய நாள் ஏதோ ஒரு மாதிரி இருக்கும்.
அப்படிப்பட்ட வாட்ஸ் ஆப்பை நாம் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். ஆனால் அதில் நாம் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு ஒரு ஸ்மார்ட் போன் தேவை. அந்த ஸ்மார்ட் போனில் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
அதன் பின் நாம் அதில் அனுமதி கொடுக்க வேண்டும். அதன் பின்னர் தான் கம்ப்யூட்டரில் நாம் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். ஆனால், ஸ்மார்ட் போன் இல்லாமல், சாதரண போன் மூலம் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும்.
இது பலருக்கும் தெரியாது.
ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ் ஆப்பை திறப்பது எப்படி?
தற்போது இருக்கும் பல கம்ப்யூட்டர்களில் Android பயன்பாடுகளை நிறுவ அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் கம்ப்யூட்டரில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த விரும்பினால், Andy மற்றும் Bluestacks போன்ற Emulator-ஐ பயன்படுத்தி, வாட்ஸ் ஆப் பயன்படுத்தலாம்.
- முதலில் Andy Android Emulator-ன் இணையதளத்தைத் திறக்கவும். அதில் பதிவிறக்கம் (Click on Download) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- இரண்டாவதாக பதிவிறக்கம் செயத பின்பு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- மூன்றாவதாக அந்த ஆப் பதிவிறக்கம் ஆன பின்பு, அதை இரண்டு முறை க்ளிக் செய்யவும். உடனே மேலே உள்ள தேடல் பெட்டியில்(Search Option) WhatsApp என்று தேடவும்.
-
இறுதியாக, Install என்பதை க்ளிக் செய்தால், அது Install ஆகிவிடும். அதன் பின் நீங்கள் எந்த எண்ணிற்கு வாட்ஸ் ஆப் பயன்படுத்த உள்ளீர்களோ, அந்த எண்ணை குறிப்பிடவும். அதைத் தொடர்ந்து அதில் ஒரு முறை உங்கள் OTP எண்ணை கொடுத்து வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம்.