வாட்ஸப்பில் வரப்போகும் புதிய அப்டேட்! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமான மக்கள் வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர், இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும். உலகளவில் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளில் வாட்ஸ்அப் 8 வது இடத்தில் உள்ளது.
இனி வாட்ஸப்பிலிருந்து வெளியேறாமலே காண்டாக்ட்ஸ் விபரங்களை திருத்தமுடியும்!
வாட்ஸப்பில் எப்போதும் புதிய அம்சங்கள் சேர்க்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் ஆப்ஸின் செய்திமடல் அம்சத்தில் சில கூடுதல் தெளிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது வாட்ஸப்பில் இருந்து வெளியேறாமலே காண்டாக்ட்ஸ் விபரங்களை எடிட் செய்யமுடியும்.
அதே நேரத்தில் WhatsApp இல் மாற்றியமைக்கப்பட்ட navigation bar ஐ விரைவில் Android iOS வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் எனவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாட்ஸப்பில் இனி வீடியோ மெசேஜ் பண்ணலாம்!
வாட்ஸப்பில் தற்போது, வீடியோ மெசேஜ் அம்சத்தை கொண்டு வருவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது .மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
வீடியோ செய்திகள் வழக்கமான வீடியோக்களிலிருந்து வேறுபட்டவை, ஏனெனில் அவை நிகழ்நேரத்தில் மட்டுமே பதிவுசெய்யப்பட்டு அனுப்பப்படமுடியும். மேலும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், நோக்கம் பெறுபவர் மட்டுமே வீடியோ செய்தியைப் பார்க்க முடியும் என்பதும், WhatsApp அதை அணுக முடியாது என்பதையும் உறுதி செய்கிறது.
இந்த அம்சம் படங்கள், வீடியோக்கள், GIFகள் மற்றும் ஸ்டிக்கர்களுக்கும் கிடைக்கும். மேலும் இது அனைத்து தளங்களுக்கும் உருவாக்கப்படுகிறது. வாட்ஸப்பின் சிறப்பம்சம் என்னவெனில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சுற்றுச்சூழல் அமைப்புகள் பல பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த encrypted messages ஆப்ஷனை வாட்ஸப் வழங்குகின்றது.
அவை ஹேக்கர்களாலோ அல்லது வேறெந்த நிறுவனங்களாலோ ஹேக் செய்யமுடியாது என உறுதியாக கூறமுடியும்.மேலும் இது வெளியிடப்படும் போது, இந்த அம்சம் பயன்பாட்டில் கூடுதலாக இருக்கும், பயனர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை பராமரிக்கும் போது, நிகழ்நேரத்தில் குறுகிய வீடியோ செய்திகளை அனுப்ப வாட்ஸப் இச்சேவையை அனுமதிக்கிறது.
உங்கள் voice ஐ வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைக்கலாம்!
வாட்ஸப்பில் மிகவும் பிரபலமான மற்றொரு அம்சம் என்னவெனில் voice ஸ்டேட்டஸ் வைக்கும் அப்டேட் ஆகும். மேலும் இது இணையத்தில் குரல் தரவை அனுப்ப VOIP தரநிலையைப் பயன்படுத்துகிறது.
image credit:New vision theatres
மேலும் Once view ஆப்ஷன், chat history பரிமாற்றங்கள் மற்றும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட chat, என WhatsApp பயன்படுத்தும் அல்லது தற்போது பீட்டா சோதனைக்கு உட்படும் பல்வேறு அப்டேட்டுகள் வாட்ஸப்பில் வரவுள்ளன.
மேம்படுத்தப்பட்ட அப்டேட் என்னவெனில், உங்கள் profile picture ஐ பயன்படுத்த உங்களுக்கென avatar ஒன்றையும் நீங்கள் உருவாக்கலாம். அத்துடன் அதே avatarகளை வைத்து ஸ்டிக்கர்களும் அனுப்பிக்கொள்ளமுடியும். வாட்ஸ்அப் முற்றிலும் இலவசம் மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களிலும் இது கிடைக்கிறது, எனவே நீங்கள் உங்கள் privacy வெளியே போகாதவாறு பாதுகாப்பாக chat செய்யமுடியும்.