ஒரு கப் கோதுமை மாவு போதும்.., தித்திக்கும் சுவையில் அப்பம் செய்யலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கோதுமை அப்பத்தை விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கோதுமை அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு- ஒரு கப்
- அரிசி மாவு- ¼ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- சமையல் சோடா- ஒரு சிட்டிகை
- உப்பு- ஒரு சிட்டிகை
- தேங்காய் துருவல்- ¼ கப்
- வாழைப்பழம்- 1
- பொடித்த வெல்லம்- ஒரு கப்
- தண்ணீர்- 1¼ கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இதில் ஏலக்காய் தூள், சமையல் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன் கலக்கவும்.
அடுத்து இதில் மசித்த வாழைப்பழம், தேங்காய் துருவல் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவும்.
இதனையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து இதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வெல்லப்பாகை கலந்து வைத்த மாவில் சேர்த்து தோசை மாவு போல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி அப்பம் போல் பொறித்து எடுத்தால் சுவையான கோதுமை அப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |