தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு மா போதும்: இப்படி Use பண்ணுங்க
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க கோதுமை மா ஒன்று போதும்.
சருமத்திற்கு கோதுமை
கோதுமையில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், செலினியம், மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கிறது.
முதலில் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
இதையடுத்து தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கீழிலிருந்து மேல் நோக்கி அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.
பின்னர் 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும். முகம் பளபளப்பாக இருக்க உதவியாக இருக்கும்.
கிடைக்கும் நன்மைகள்
கோதுமை மாவு பேஸ்பேக்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் பொலிவையும் மேம்படுத்துகிறது.
கோதுமை மாவுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்ந்து உபயோகிக்கும் போது முகப்பரு பிரச்சனைகள், கரும்புள்ளிகள் ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் பிக்மென்ட்ஸ் எனப்படும் கருந்திட்டுகள் மறையவும், விரைவில் வயதான தோற்றத்தைத் தடுக்கவும் கோதுமை மாவு பேஸ் பேக் உபயோகமாக உள்ளது.
கோதுமையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் படிந்துள்ள வியர்வை, அழுக்குகளை நீக்கவும், வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய கருந்திட்டுக்களை அகற்றவும் உதவியாக உள்ளது.
கோதுமை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், தேன், தயிர், போன்ற பொருள்களைச் சேர்த்தும் பேஸ்பேக் போடும்பொழுது முக பளபளப்பிற்கும் உதவியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |