Instant Paratha: மா பிசைய தேவையில்லை.., 10 நிமிடத்தில் சுவையான கோதுமை பரோட்டா செய்யலாம்
பரோட்டா என்பது பிரபல ஹொட்டல்களில் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
பரோட்டா செய்வதற்கு மாவு பிசைவது என்பது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். இனி அந்த கவலை வேண்டாம்.
மாவு பிசையாமலையே மென்மையான கோதுமை பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மா- 1 கப்
- பூண்டு- 2 பல்
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- தண்ணீர்- தேவையான அளவு
- வெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மா, துருவிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மா போல் கரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் 1 ஸ்பூன் வெண்ணெயை உருக்கி சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் கரைத்த மாவை வட்ட வடிவில் ஊற்றி வேகவைக்கவும்.
பின்னர் ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவைக்கவும்.
அதனை மேல் அழுத்தம் கொடுத்து வெண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்தால் சுவையான கோதுமை பரோட்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |