பி.எஃப் (PF) பணத்தை எப்போது எடுக்கலாம்.. எவ்வளவு எடுக்கலாம்? முழு விவரம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்னும் பி.எஃப் பணத்தை எப்படி எடுக்க வேண்டும் என்றும், எவ்வளவு எடுக்கலாம் என்பதும் குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி
இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) பார்க்கப்படுகிறது. இந்த நிதிக்கு, பணிபுரியும் நிறுவனமும், பணியாளரும் சமமான நிதியை வழங்குகின்றனர். பணியாளர் ஓய்வு பெற்ற பின்பு, இந்த நிதியானது அவரது கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதனுடைய முக்கிய நோக்கம் என்னவென்றால், பாதுகாப்பான ஓய்வூதிய கட்டமைப்பை உருவாக்குவதாக இருந்தாலும், சில சூழல்களில் சேமிப்புகளை முன்கூட்டியே பெறுவதற்கு அனுமதிக்கின்றன.
Istock
குறிப்பாக, நீங்கள் வேலை செய்யும் வரை உங்களது பி.எஃப் (PF) பணத்தை எடுக்க முடியாது. ஆனால், சில காரணங்களுக்காக குறிப்பிட்ட தொகையை பணியாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
அதுவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு முன் 2 மாதங்கள் பணியாளர் வேலையில்லாமல் இருந்திருக்க வேண்டும் என்ற சில விதிகள் இதில் இருக்கின்றன. 2022-23 நிதியாண்டில் 8.15% விழுக்காடு வட்டி விகிதத்தை பணியாளர்களின் சேமிப்புக்கு EPFO அறிவித்தது.
வேலையின்மை
புதிய விதிகளின் படி, பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் மூன்று மாத அடிப்படை சம்பளத்துக்கு சமமான பணம் அல்லது பி.எஃப் கணக்கில் நிகர இருப்பு நிதியில் 75 % சமமான பணத்தை திரும்பப் பெறலாம்.அதாவது, இதில் எது குறைந்த தொகையோ, அது அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.
istock
ஒரு நபர் ஒரு மாதத்திற்கும் மேல் வேலையில்லாமல் இருந்தால், சேமிக்கப்பட்ட தொகையில் இருந்து 75% பெற முடியும். இதுவே, தொடர்ந்து இரண்டு மாதத்திற்கும் மேல் இருந்தால், மீதமுள்ள 25% தொகையையும் பெறலாம்.
கல்வி
பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது குழந்தைகளின் உயர் கல்வி அல்லது 10 ஆம் வகுப்புகளுக்கு பின்பு உள்ள கல்வி செலவுக்கு பயன்படுத்த சேமிப்பில் இருந்து 50% வரை திரும்பப் பெறலாம்.
istock
இதற்கு பணியாளர், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
திருமணம்
பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய திருமணம் அல்லது கணக்கு வைத்திருப்பவரின் மகன், மகள், சகோதரர் அல்லது சகோதரியின் திருமணத்திற்கு தேவையான செலவுக்காக சேமிப்பில் இருந்து 50% வரை திரும்பப் பெறலாம்.
இதற்கும் பணியாளர், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் 6 மாத ஊதியத்தை விலையுயர்ந்த உபகரணங்களை வாங்குவதற்கு பி.எஃப் பணத்தை எடுக்கலாம். இது அவர்களின், நிதி சுமையை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
istock
அவசரகால மருத்துவ உதவி
பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டால் நிலுவைத் தொகையை திரும்பப் பெறலாம்.
கடன்கள்
பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வீட்டுக் கடன் (EMI) செலுத்துவதற்காக, தனிநபர்கள் 36 மாத அடிப்படை ஊதியம் அல்லது நிறுவன பங்கை வட்டியுடன் திரும்பப் பெறலாம்.
இவர்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |