பேரிச்சம் பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா ?

Dates Life Style
By Sakthi Raj Sep 03, 2026 10:26 AM GMT
Report

பேரிச்சம்பழத்தில் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஃபைபர், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

இருந்தாலும் இந்த பேரிச்சம் பழத்தை நாம் சாதாரணமாக சாப்பிடுவதை விடவும் சரியான நேரத்தில் சாப்பிடுவது தான் நமக்கு உடல் ரீதியாக ஒரு மிகப்பெரிய அளவில் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

அந்த வகையில், பேரிச்சம் பழத்தை நம் எப்பொழுது சாப்பிட்டால் அதிக அளவில் நமக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

பேரிச்சம் பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா ? | When Is The Right Time To Eat Dates

1.வெறும் வயிற்றில்:

இந்த பேரிச்சம் பழத்தை நாள் துவங்கும் பொழுது அதுவும் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று பேரிச்சம் பழம் சாப்பிடுவது உடல் ரீதியாக ஒரு மிகப்பெரிய அளவில் சக்தியை கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் இருக்கக்கூடிய பைபர் நம்முடைய செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. ஆதலால், தினமும் காலையில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் நமக்கு ஹீமோகுளோபின் அளவு, குறிப்பாக இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது.

2. உடற்பயிற்சிக்கு:

தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்யக்கூடிய நபராக இருந்தால் 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பாக பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்கின்ற பொழுது அது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஒரு நன்மையை அளிக்கிறது.

அதில் இருக்கக்கூடிய இயற்கையான சர்க்கரை உடலுக்கு மெதுவாக ஆற்றலை வழங்குவதோடு பயிற்சி மேற்கொள்கின்ற பொழுது சோர்வை குறைக்கவும் உதவுகிறது. இதன் வழியாக உடலுக்கு நல்ல சக்தி கிடைப்பதோடு தசைகளுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

பேரிச்சம் பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா ? | When Is The Right Time To Eat Dates

3. இரவில் பாலுடன்:

சிலருக்கு இரவு நேரங்களில் பேரிச்ச பணம் எடுத்துக் கொள்வது அவர்களுக்கு பயனுள்ளதாக அமைக்கும். குறிப்பாக, உடல் சோர்வு பலவீனமாக இருப்பவர்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக ஒரு இரண்டு பேரிச்சம் பழங்களை வெதுவெதுப்பான பாலில் வேகவைத்து கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம்.

இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு நரம்புகளை அமைதிப்படுத்தி தரமான தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. இருப்பினும் செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் இரவு நேரத்தில் அதிக பேரிச்சம்பழம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:

1.பேரிச்சம் பழத்தில் குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் இதுபோன்ற இயற்கையான சர்க்கரைகள் இருக்கிறது. அதனால், சோர்வாகவும் பலவீனமாக உணரும் பொழுது நிச்சயம் இரண்டு மூன்று பேரிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் விரைவில் ஒரு நல்ல ஆற்றலை பெறும்.

2.மேலும், பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது குடலின் செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடலில் வளர்ச்சிதை மாற்றமும் சீராக அமைகிறது. குறிப்பாக தொடர்ந்து ஒருவர் பேரிச்சம் பழம் சாப்பிடுகின்ற பொழுது அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் முற்றிலும் விலகுகிறது.

3. பேரிச்சம் பழத்தில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான செலினியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை நம்முடைய எலும்புகளை வலுப்படுத்துவதோடு எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது.

பேரிச்சம் பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா ? | When Is The Right Time To Eat Dates

4. இந்த பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும், கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இது உதவுகிறது. இதனால் நம்முடைய இதய ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்கும்.

5. இந்த பேரிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நம்முடைய சருமத்திற்கு ஊட்டச்சத்தை கொடுக்கிறது. இதன் வழியாக சருமம் ஒரு நல்ல பொலிவை பெறுவதோடு சுருக்கங்கள் குறையவும் உதவுகிறது.

இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நம்முடைய கூந்தலுக்கும் வலிமையை கொடுக்கிறது. இந்த பேரிச்சம்பழம் பார்ப்பதற்கு சிறிய அளவாக இருந்தாலும் அதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

இருப்பினும் சரியான நேரத்தில் அளவோடு எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் கிடைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, உடற்பயிற்சிக்கு முன்பாக சாப்பிடுவது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது அல்லது இரவு பாலுடன் சாப்பிடுவது என ஒவ்வொரு நேரத்திலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதற்கான தனி காரணங்கள் இருப்பதால் இன்னும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது நிச்சயம் அதற்குரிய ஒரு நல்ல பலன்களை பெறலாம்.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US