While என்ற சொல் எப்போது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும்?
While என்ற சொல்லை இணைச்சொல்லாகவோ, பெயர்ச்சொல்லாகவோ அல்லது வினைச்சொல்லாகவோ பயன்படுத்தலாம்.
இணைச்சொல்லாக (Conjunction)
இரண்டு சொற்றொடர்களை இணைக்கப் பயன்படுத்தலாம். அதாவது, ஒன்று நடக்கும் நேரத்தில் இன்னொன்று நடப்பதைக் குறிக்க இரண்டு சொற்றொடர்களையும் இணைக்கும் சொல்லாகப் பயன்படுத்தலாம்.
இதன் பொருள்கள்: during the time that, at the same time that, as long as என்று சூழலுக்குத் தக்கவாறு வரும். சில நேரத்தில் "although" (= இருப்பினும், இருந்தாலும்) என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளும்.
எ.கா.
"They cleaned the house while I went out." (= நான் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டை அவர்கள் சுத்தம் செய்தார்கள்)
"Turn off your cellphone while in class" = "Turn off your cellphone while [you' in class" = "வகுப்பில் இருக்கும் நேரத்தில் உன் செல்பேசியை அணைத்து வை."
"Her remark, while well-intentioned, hurt him." = "Her remark, well-intentioned, hurt him." = "அவள் கூறிய கூற்று நல்லெண்ணத்தில் இருந்தாலும் அவனைக் காயப்படுத்தியது."
பெயர்ச்சொல்லாக (Noun)
பெயர்ச்சொல்லாக வரும்போது அதன் பொருள் "காலம்", "நேரம்".
எ.கா.
"I haven't met him in a while." = சிறிது காலமாக நான் அவனை சந்திக்கவில்லை.
“She comes here once in a while.” = "எப்பொழுதாவது அவள் இங்கே வருவாள்."
வினைச்சொல்லாக (Verb)
"நேரத்தைக் கழி (அ) கடத்து" , "காலத்தை வீணாக்கு" போன்ற பொருள்களில் வரும். பொதுவாக, "while away" என்று வரும்.
எ.கா.
" I while away my weekends watching movies or playing cricket." = சினிமா பார்த்தோ கிரிக்கெட் விளையாடியோ வார இறுதிநாட்களைக் கழிப்பேன்.
"Don't while away your time sleeping all day." = தூங்கி தூங்கியே நேரத்தை வீணாக்காதே.