ஒரு காலத்தில் அண்ணி கேட்டுக்காக பிறந்தநாள் விழாவையே தள்ளிவைத்த ஹரி: மாறிப்போன சூழல்
தனது அண்ணன் மனைவியான இளவரசி கேட் கர்ப்பமுற்றிருந்ததால், அவர் மசக்கையால் அவதியுற, அவருக்காக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களையே தள்ளிவைக்க முடிவு செய்தவர் இளவரசர் ஹரி.
ஆனால் இன்று, நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது.
உடன்பிறவா சகோதரி
இளவரசர் ஹரி, தனக்கு உடன் பிறந்த சகோதரி இல்லை என்ற கவலையைத் தீர்த்தவர், தனது அண்ணன் மனைவியான இளவரசி கேட்தான் என்று கூறியதுண்டு.
2014ஆம் ஆண்டு, இளவரசர் ஹரியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக திட்டமிட்டிருந்த இளவரசர் ஹரியும் அவரது மனைவியான இளவரசி கேட்டும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.
ஆனால், பிறந்தநாள் நெருங்கிவரும் நேரத்தில், இளவரசி கேட் வயிற்றில் குட்டி இளவரசி சார்லட் உருவாகியிருக்க, அவர் கடுமையான மசக்கையால் அவதியுற்றார்.
தன் உடன்பிறவா சகோதரி கேட் மசக்கையால் அவதியுறுவதைக் கண்ட இளவரசர் ஹரி, தனது அண்ணிக்காக தனது பிறந்தநாள் விழாவையே தள்ளிவைக்க முடிவு செய்தார்.
மாறிப்போன சூழல்
ஆனால், இன்று குடும்பத்தை விட்டு தொலைவில், அமெரிக்காவில், தனது மனைவி பிள்ளைகளுடன் மட்டுமே தனது பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளாராம் ஹரி.
அத்துடன், தன் மனைவி இல்லாமல், தனது நெருங்கிய நண்பர்களுடன் சர்வதேச சுற்றுலா செல்ல ஹரி முடிவு செய்துள்ளதாகவும் PEOPLE பத்திரிகை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |