தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்து அரசு அறிவிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து கால அட்டவணை எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நவம்பர் 4ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, , தமிழகத்தில் 2025 - 26 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வரும் நவம்பர் 4ஆம் திகதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனையில் செய்முறை தேர்வு, பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் முடிவுகள் வெளியிடும் திகதிகளும் வெளியிடப்படவுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |