40 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு எப்போது தடுப்பூசி? சுகாதார துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் தேசிய சுகாதார சேவை (NHS) வரும் வாரங்களில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டோஸ் வழங்க முடியும் என கூறப்படுகிறது.
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடுத்த வாரத்தில், அரசாங்கத்தின் இலக்கை விட மூன்று வாரங்களுக்கு முன்னதாக, தடுப்பூசி பெறுவதற்கான அழைப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்கிடையில், பிரித்தானியாவின் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஈஸ்டர் பண்டிகை முதல் தடுப்பூசிகளை வழங்கப்படும் என்ற தகவல் “தவறானது” என்று கூறியுள்ளார்.
மேலும், "தடுப்பூசி திட்டத்திற்கான எங்கள் காலக்கெடுவை நாங்கள் வகுத்துள்ளோம், இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றும், "ஏப்ரல் நடுப்பகுதியில் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் ஜூலை இறுதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் முதல் டோஸ் வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.