தமிழகத்தின் கரையை நெருங்கும்போது புயல் வலுவிழக்கக்கூடும்- இந்திய வானிலை மையம்
வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல், தமிழ்நாட்டின் கரையை நெருங்கும்போது, வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஃபெங்கல் புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

அதன் பிறகு, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும்போது, புயல் வலுவிழந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |