மனித உடலிலுள்ள வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம்: சுவிஸ் அறிவியலாளர்களின் ஆச்சரிய முயற்சி
மனித உடலிலுள்ள வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் சுவிஸ் அறிவியலாளர்கள் குழு ஒன்று இறங்கியுள்ளது.
நமக்கு காய்ச்சல் வரும்போது நமது உடல் சூடாவதை உணர்ந்திருப்போம். இந்த வெப்பம்தான் நம்மை குளிர் இரத்த பிராணிகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.
மனித உடலிலுள்ள வெப்பத்தை சேமித்து அதிலிருந்து மின்சாரம் உருவாக்கமுடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒரு பிரிவாகிய மித்ராஸ் என்னும் அமைப்பு, தற்போது மனித உடலிலுள்ள வெப்பத்தை சேமித்து அதிலிருந்து மின்சாரம் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
மனித உடலிலிருந்து உருவாகும் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு 100 வாட் மின்விளக்கை எரியச் செய்ய முடியும்! மனிதனிடமிருந்து வெளியேறும் ஆற்றலில் பெரும்பகுதி சுற்றுப்புறத்தில் வெளியேறி வீணாகிறது. அதை எப்படி மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.