நீங்கள் உடல் எடையை குறைக்க உலர் பழங்கள் சாப்பிடறீங்களா? அப்போ இந்த தப்பை செய்யாதீங்க! எடை கூடிவிடுமாம்
உடல் எடை குறைப்பது பலருக்கு ஒரு சவாலாக இருந்து வருகின்றது. நீங்கள் கடினமாக டயட் செய்து உடற்பயிற்சி செய்து வந்தாலும் நீங்கள் செய்யும் ஒரு சில விஷயங்களால் எடை கூடிவிடுகிறது.
இதனால் நீங்கள் செய்யும் டயட்டுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆரோக்கியமான உணவுகளை அளவாக சாப்பிட்டால் உடல் எடைகளை ஈசியாக குறைக்கலாம்.
சிலர் எடையை குறைக்க சாப்பாட்டை எடுத்துக்கொள்ளாமல் நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவற்றை சரியான வழிமுறையில் கையாண்டால் உடல் எடையை குறைக்கலாம்.
அதிக கலோரிகள் கொண்ட ஆரோக்கியமான உணவுகளை உண்ட பிறகு ட்ரை நட்ஸ்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் உடல் எடை கூடிவிட வாய்ப்புகள் இருக்கின்றன.
நீங்கள் காலை நேர உணவுடன் இந்த வகையான நட்ஸ்களை எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உணவு நேரம் தவிர மற்ற நேரங்களில் தின்பண்டங்களையும் இதுபோன்ற டிரை ப்ரூட்ஸ்களையும் சாப்பிடுவதை தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும்.
பகல் நேரத்தில்தான் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். அந்த நேரத்தில் நீங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கான பயணத்தின்போது இந்த வகையான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் சிப்ஸ், இனிப்பு, எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றினை கட்டாயமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பைபர், வைட்டமின் சத்துக்கள் இருக்க கூடிய ஸ்நாக்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.