வெளியேறும் ரிஷி சுனக்…பிரித்தானியாவின் புதிய பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்பது எப்போது?
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லேபர் கட்சியின் தலைவர் சர் கெய்ர்ர் ஸ்டார்மர் விரைவில் பதவியேற்க உள்ளார்.
லேபர் கட்சி அபார வெற்றி
பிரித்தானிய பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
லேபர் கட்சி தொடர்ந்து அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது, தற்போது வரை 343 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் விரைவில் பதவியேற்க உள்ளார்.
ஆட்சி மாற்றம் எப்போது?
ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மன்னர் சார்லஸிடம் வழங்க செல்வதற்கு முன், காலை 10:30 மணியளவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார்.
அதனை தொடர்ந்து அரசு மாளிகையில் இருந்து தன்னுடைய தனிப்பட்ட வாகனத்தில் தன்னுடைய தனிப்பட்ட வீட்டிற்கு திரும்புவார்.
BREAKING: Rishi Sunak concedes defeat in UK election
— Junaid Suhais (@junaidsuhais) July 5, 2024
Even as he's speaking, someone comes up behind him with an "L" sign denoting "LOSER" #UKElection2024 #Rishi_Sunak pic.twitter.com/9e7XOlDHqa
இதன்பிறகு லேபர் கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் அரண்மனைக்கு சென்று மன்னரிடம் புதிய ஆட்சியை அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பார்.
இதையடுத்து பின் அதிகார மாற்றத்திற்கான தருணத்தை பதிவு செய்வதற்கான புகைப்படம் எடுப்பதற்கு முன், சார்லஸ் மன்னரிடம் தலைவணங்கி அவருடன் சர் கெய்ர் ஸ்டார்மர் கைக்குலுக்கி கொள்வார்.
பின் மதியம் 12.20 மணியளவில் டவுனிங் தெருவில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் உரையாற்றுவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |