நடராஜன் அடுத்து விளையாடும் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும்? ரசிகர்கள் எதிர்பார்த்த கேள்விக்கு கிடைத்த பதில்
தமிழக வீரர் நடராஜன் அடுத்ததாக விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில் போட்டி தொடங்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் நடராஜன் தனது அபார பந்துவீச்சு மூலம் அவுஸ்திரேலிய தொடரில் அசத்தினார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் மீண்டும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் தற்போது நடராஜன் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது விஜய் ஹசாரே கோப்பைக்கான திகதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 20ஆம் திகதி துவங்கும் தொடரானது மார்ச் 14ஆம் திகதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து அணிகளையும் சேர்த்து ஆறு குழுக்களாக பிரித்து இந்த தொடரை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரின் தமிழ்நாடு அணிகள் நடராஜன் இடம் பெற்றுள்ளார்.