அதிசார குரு பெயர்ச்சி 2021 எப்போது? எந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷ்டம் ?
அதிசாரம் என்பது கிரகங்கள் தனது சுற்றுப்பயணத்தில் சூரியனை ஒன்பது கிரகங்களும் சுற்றி வருகிறது.
கிரகங்கள் இந்த சுற்று பயணத்தின் போது வேகம் எடுப்பதை தான் அதிசார குரு பெயர்ச்சி என்று கூறுகின்றன.
அதாவது தற்போது தன்னை விட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாய் கிரகத்தை கடந்து செல்லும் போது அதனால் ஈர்க்கப்படுவதால் குரு தன் சாதாரண நகர்வு வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் நகரத்தொடங்குவார்.
குருபகவான் தன் பயணத்தின் போது அதிக வேகம் எடுத்து மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு சென்று மீண்டும் மகரம் ராசிக்கு வந்து சேர்வார்கள்.
இதனை தான் அதிசார குருபெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில் இந்த 2021 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு குரு அதிர்ஷ்டங்களை தரப்போகின்றார்? எவருக்கு கெடுப்பலன்களை கொடுக்கப்போகின்
அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு?
குரு அதிசார பெயர்ச்சியாக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு 2021 ஏப்ரல் 6ம் தேதி செல்கிறார். செப்டம்பர் 16ம் தேதி வரை குரு சுமார் 160 நாட்கள் (5 மாதம், 1 வாரம்) கும்பத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
கடந்தாண்டு வெறும் 92 நாட்கள் (3 மாதங்கள்) மட்டுமே அதிசார நிலைக்கு சென்ற குரு பகவான். இந்த முறை தன்னுடைய கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக 160 நாட்கள் வரை அதிசார நிலையாக குரு பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.
எந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷ்டம் ?
- மிதுன ராசி - குருவின் 5ம் பார்வை
- சிம்ம ராசி - குருவின் 7ம் பார்வை
- துலாம் ராசி- குருவின் 9ம் பார்வை
கெடு பலன்களை பெறும் ராசிக்காரர் யார்?
- மேஷம்
- கடகம்
- கன்னி
- விருச்சிகம்
- மகரம்
அதிசார குரு பெயர்ச்சி விளைவுகள் என்ன?
- சாதாரண நேரங்களைப் போல் இல்லாமல், தன் பயணத்தில் வேகம் எடுக்கும் குரு ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் மகிழ்ச்சியைச் சற்று அதிகமாக வழங்குபவர். அசாதாரண பணிகளைச் செய்யும்போது புகழ் மற்றும் மரியாதையை அடைகிறார்கள்.
- அதே சமயம் மீண்டும் அதிசார நிலையிலிருந்து வக்ர நிலையாக பழைய ராசியை அடையக்கூடிய காலத்தில் அந்த பலன்கள் எதிராக நடக்கும்.
-
இதன் காரணமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாதாரணமாக செய்யக்கூடிய வேலையில் சரியாக யோசிக்க முடியாத நிலை ஏற்படும். எதிலும் சற்று கவனமாக செயல்பட வேண்டியதாக இருக்கும்.