சுவிட்சர்லாந்தில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும்?
இந்த கொரோனா கொள்ளைநோய் எப்போது முடிவுக்கு வரும்?
சுவிட்சர்லாந்தில் உள்ளவர்கள் மனதில் மட்டுமல்ல, உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் மனதில் இந்த கேள்வி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், யாரிடமும் இந்த கேள்விக்கான தெளிவான பதில் இல்லை. ஆனாலும், Omicron பரவல் இந்த கொள்ளைநோயை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என சில தொற்றுநோயியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவத்துறை மீது கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று பயங்கரமாக பரவி வரும் நிலையிலும், சுவிட்சர்லாந்தில் இந்த கொள்ளைநோய் முடிவை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதா?
ஆம் என்கிறார்கள் சில மருத்துவத்துறை வல்லுநர்கள்!
சுவிஸ் மாகாண சுகாதார இயக்குநர்கள் மாநாடு என்ற அமைப்பைச் சேர்ந்தவரான Rudolf Hauri கூறும்போது, வசந்த காலத்தின்போது பெருமளவில் நாம் இந்த கொள்ளைநோயை மேற்கொண்டுவிடுவோம் என்கிறார். அதற்குக் காரணம், அந்த நேரத்தில் மக்களுக்கு போதுமான அளவில் அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என்கிறார் அவர்.
சுவிட்சர்லாந்தில் வேகமாக பரவிவரும் Omicron வகை கொரோனா வைரஸ், இன்னும் சில வாரங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மக்களையாவது தொற்றியிருக்கும். ஆகவே, மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் என்கிறார் கொரோனா எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினரான Richard Neher.
அதாவது, Omicron இப்போது பரவும் அதே வேகத்தில் தொடர்ந்து பரவவேண்டும், அப்போது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என்கிறார் அவர்.
தொற்றுநோயியல் நிபுணரான Christian Drostenம் கொள்ளைநோய் முடிவுக்கு வருவது குறித்து நேர்மறையான கருத்துக்களையே தெரிவித்துள்ளார்.
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள், சீக்கிரத்தில் சாதாரண வாழ்வுக்கு திரும்பப்போகிறார்கள். அவர்களுக்கு கொள்ளைநோய் காலகட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்கிறார் அவர். ஆனாலும், இன்னும் கொஞ்சம் காலத்துக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் கட்டிடங்கள் போன்ற இடங்களுக்குள் மக்கள் மாஸ்க் அணியவேண்டியிருக்கும் என்கிறார் Christian Drosten.
தொற்று நோயியல் சிறப்பு நிபுணரான Huldrych Günthardம், கூடுதல் மக்கள் கொரோனா தடுப்பூசி பெற்று, தடுப்பூசி பெறாதோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து விடுபட்டுவிடும் நிலையில், கோடைகாலத்தில் கொள்ளைநோய் முடிவுக்கு வந்திருக்கும் என்கிறார்.
அதே நேரத்தில், இன்னொரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் உருவாகிவிடக்கூடாது என்றும் எச்சரிக்கிறார் அவர்.