பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன் தம்பதியர்: எங்கு வாழ்கிறார்கள்?
Prince Harry and Meghan Markle rumoured staying secret farmhouse retreat: பிரித்தானியா திரும்பிய இளவரசர் ஹரியும், மேகனும், ரகசிய பண்ணை வீடொன்றில் தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.
இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள்.
அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி, மேகன் தம்பதியர் எங்கு வாழ்கிறார்கள்?
ராஜ குடும்பத்துக்கு சொந்தமாக ஏராளமான மாளிகைகள் இருந்தும், பிரித்தானியா திரும்பியுள்ள ஹரி, மேகன் தம்பதியர் சாதாரண குடிமக்களே என மன்னர் அறிவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு அரண்மனையில் இடமில்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், அவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள் என்பது குறித்து செய்திகளும், வதந்திகளும் வெளியானவண்ணம் உள்ளன.

சமீபத்தில், ஹரியின் மனைவியான மேகன், Cotswolds என்னும் பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் ஹரியும் மேகனும் தங்கக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
Chipping Norton மற்றும் Great Tew என்னும் கிராமங்கள் அமைந்துள்ள பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள Soho Farmhouse என்னும் ஆடம்பர மாளிகையில் உள்ள ஒரு வீட்டில் ஹரி, மேகன் குடும்பம் தங்கலாம் என கூறப்படுகிறது.
என்றாலும், இந்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை!